Dailyhunt

இ-மெயில் முகவரி அளிக்காவிட்டால் வேட்பாளர்களின் மனு நிராகரிக்கப்படும் - தேர்தல் கமிஷன் அதிரடி

Bhoomi Today 3 weeks ago

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்யம் உறுதிமொழிப் பத்திரத்தில் அணைத்து விவரங்களையும் முழுமையாகக் குறிப்பிட வேண்டும்.

எந்த தகவல்களும் விடுபடக் கூடாது. ஒரு வேட்பாளர் உறுதிமொழி பத்திரத்தில் சொத்து-கடன் விவரங்கள் குற்றப்பிண்ணனி நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகள் தண்டனை விவரங்கள் கல்வித்தகுதி பான்கார்டு வருமான வரி விவரம் தொடர்பு விவரங்கள் சமூக ஊடகக் கணக்குகள் என அணைத்தையம் கட்டாயம் கொடுக்க வேண்டும்.இவற்றோடு இ-மெயில் முகவரியும் கட்டாயம் கொடுக்க வேண்டும் என தேர்தல் கமிஷன் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2013 ம் ஆண்டு செப்டம்பர் 13 ம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் வேட்பாளர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை முழுமையாக சமர்ப்பிப்பது சட்டபுர்வ கடமையாக்கப் பட்டுள்ளது. இதனை உறுதி செய்யம் பொறுப்பு தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

உறுதிமொழிப் பத்திரத்தில் ஏதேனும் ஒரு பகுதி நிரப்பப்படாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு நோட்டீஸ் வழங்கப்படும். நோட்டீஸைப் பெற்ற உடன் புதிய உறுதிமொழிப் பத்திரத்தை வேட்பாளர் தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் பரிசீலனையின்போது அந்த வேட்பாளரின் மனு நிராகரிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bhoomi Today