Dailyhunt

இன்றைய பிற்பகல் செய்திகள் - 02.04.2026

Bhoomi Today 1 week ago
  1. கூகுள்பே, போன்பே பரிவர்த்தனைகளில் மாற்றம். UPI செயலிகளில் முதல் "இரு காரணி அங்கீகாரம்" 2FA என்ற புதிய பாதுகாப்பு விதிமுறை அமலுக்கு வந்தள்ளது. இனி பண பரிவர்த்தனைகளை முடிக்க வெறும் PIN நம்பர் மட்டும் போதாது.கூடுதலாக ஓடிபி OTP அல்லது கைரேகை போன்ற பயோமெட்ரிக் சரிபார்ப்பையும் பயனர்கள் கட்டாயம் செய்ய வேண்டும்.
  2. பான்கார்டு பெறுவதற்கு பிறப்புச் சான்றிதழ் சமர்ப்பிப்ப்பது கட்டாயம். மத்திய அரசின் புதிய சட்ட திருத்தத்தின்படி நடைமுறைக்கு வந்தது.
  3. பணக்கார்ர்கள் பார்ட்டி செய்வதற்கும் முதலீடு செய்வதற்குமான இடங்களான துபாய், அபுதாபி இனி யுத்த களமாக மாறும் என அமெரிக்க பொருளாதார நிபுணர் ஷெஃப"ரி சாக்ஸ் எச்சரிக்கை.
  4. அமைச்சரவை எடுக்கும் முடிவை ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் ஆளுநருக்கு தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கக்கூடிய அதிகாரம் இல்லை. அவர் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர். - நீண்ட காலம் சிறையில் இருப்போரை முன்கூட்டியே விடுதலை செய்யும் அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்தது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bhoomi Today