Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

இன்றைய தலைப்புச் செய்திகள் - 06.05.2026

Bhoomi Today 1 week ago
  1. சர்வதேச ஐடி நிறுவனமான காக்னிசன்ட் 15 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டம் எனத் தகவல். இதில் இந்தியாவில் மட்டும் 13 ஆயிரம் பேர் வேலை இழக்க உள்ளதாக அச்சம்.
  2. தமிழ்நாட்டில் விஜய் ஆட்சி அமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க முடிவ செய்துள்ளது.
  3. தவெக ஆட்சி அமைக்க அதிமுகவின் நிபந்தனையற்ற ஆதரவு. அமைச்சரவை மற்றும் பதவிகளுக்காக தீவிர பேச்சு வார்த்தை. எடப்பாடி இல்லத்திற்கு விஜய் வருகை.
  4. சென்னை ராயபுரத்தில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தவெக நிர்வாகி போக்சோவில் கைது.
  5. 2 மந்திரி மற்றும் சில பதவிகளுக்காக தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு மூடுவிழா நடத்தப் போகிறீர்களா? - திமுக கேள்வி.
  6. 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிட மாநில அரசின் அனுமதி தேவை என்பதால் புதிய அரசு பதவியேற்பு, அமைச்சரவை விரிவாக்கம் உள்ளிட்ட விவகாரங்களால் வரும் 8ம் தேதி முடிவுகள் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தகவல்.
  7. ஜோலார்பேட்டை உட்பட 20 முக்கிய ரயில் நிலையங்களில் நவீன அடுக்குமாடி வாகன நிறுத்துமிடங்கள் - சென்னை ரயில்வே கோட்டம் தகவல்.
  8. உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்fயை 34லிருந்து 38 ஆக உயர்த்த புதிய மசோதாவை அறிமுகம் செய்ய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்.
  9. ஆதார் அட்டையில் மாற்றம் வர உள்ளதாக வெளியான தகவலை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bhoomi Today