Dailyhunt
லீடர்- 3 நாட்களில் ரூ.25 கோடி! மாஸ் காட்டிய லெஜண்ட்!

லீடர்- 3 நாட்களில் ரூ.25 கோடி! மாஸ் காட்டிய லெஜண்ட்!

Bhoomi Today 1 week ago

திர் நீச்சல்', 'காக்கி சட்டை', 'பட்டாசு', 'கொடி', 'கருடன்' ஆகிய ஹிட் படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடித்த லீடர் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.

விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் லெஜண்ட் நடிப்பை பார்த்த பலரும் அவருக்கு தரமான கம்பேக் படமாக அமைந்துள்ளது என பாராட்டியுள்ளனர். இதன் மூலம் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்‌.

இந்த படத்தில் ஷாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புத், லால், அமிர்தா ஐயர், விடிவி கணேஷ், ஐஸ்வர்யா பாஸ்கரன், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

கடந்த 3ம் தேதி வெளியான லீடர் படம் 3 நாட்களில் உலகளவில் ரூ. 25 கோடி பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த வாரம் வெளியான படங்களில் லீடர் படம் அதிக வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. வெளிநாட்டிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வசூல் படிப்படியாக உயர்ந்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bhoomi Today