நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் பார்த்தால் ஒவ்வொரு மெசேஜிலும் B T S C இதுபோன்ற எழுத்துக்கள் வரும்.
இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா? தெரிந்தால் நீங்கள் தேவையில்லாத மெசேஜை தொடாமல் இருப்பீர்கள் அல்லவா? வாங்க இதைப் பற்றி சற்று விலாவாரியாக பார்ப்போம்.
இதுபோல் வரும் ஒவ்வரு கோட்வேர்டுக்கும் ஒரு அ ர்த்தம் இருக்கு என்பதை இப்ப நீங்க தெரிஞ்சுக்க போறீங்க.
G - (Government) - என்ற எழுத்துடன் வரும் மெசேஜ் கவர்ன்மெண்ட் கிட்டருந்நு வருவது. இயற்கை பேரிடர் குறித்து எச்சரிக்கை செய்திகள் மற்றும் சில நேரங்களில் திட்டங்கள் குறித்த தகவல்களுக்கும் இவ்வாறு வரும்.
T - (Transactions) - பண பரிமாற்றங்கள் தொடர்பான மெசேஜ்கள் இந்த எழுத்துடன் வரும். பேங்கோட ஓடிபி மற்றும் பணம் செலுத்தப்பட்டதை உறுதி செய்யும் Payment Confirmation நமது வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவை இந்த எழுத்துடன் வரும்.
S - (Services) - இந்த எழுத்துடன் வருபவை சர்வீஸ் மெசேஜ்கள். Jio, Amazon Flipkart Airtel ஆகியவற்றிலிருந்து வருபவை..
P - (Promotional) - Loan Offer, Discount, Advertisement ஆகியவை இந்த எழுத்துடன் வரும்.
JT-JIOINF-S
இதை மூன்று பகுதிகளாக கொள்வோம். முதல் பகுதியில் 2 எழுத்துக்களும் இரண்டாவது பகுதியில் 6 எழுத்துக்களும் மூன்றாவது பகுதியில் 1 எழுத்தும் காணப்படும்.
முதல் பகுதி
முதல் எழுத்து ஆப்பரேட்டர் பெயர். இந்த மெசேஜை உருவாக்கும் நிறுவனத்தின் பெயரின் முதல் எழுத்து. இரண்டாவது எழுத்து எந்த தொலைத்தொடர்பு வட்டம் என்பதைக் குறிக்கும்.
இரண்டாவது பகுதி
இதில் வரும் 6 எழுத்துக்களும் ஒன்று எழுத்துக்களாகவோ அல்லது எண்களாகவோ இருக்கும். எண்ணும் எழுத்தும் கலந்து வராது. இது அனுப்புபவரின் அடையாளக் குறியீடு. இது ஒரு தனிப்பட்ட நபரின் பெயரோ அல்லது வியாபார நிறுவனத்தின் பெயரோ இருக்கும்.
உதாரணத்திற்கு கீழே குறிப்பிட்டவற்றை காணுங்கள்.
AD - Airtel Delhi BP - BSNL Punjab VK - Vodafone Kolkata
VM - Vodafone Mumbai JD - Jio Delhi VP - Videocon Punjab MD - MTNL Delhi
Service Provider Codes :
A : Bharti Airtel and Bharti Hexacom
B : BSNL
C : Datacom
D : Aircel and Dishnet Wireless
E : Reliance Telecom
H : HFCL
I : Idea Cellular, Aditya Birla Telecom
J : Jio
L : Loop Telecom and BPL
M : MTNL
P : Spice Communications
R : Reliance Communications
S : S-Tel Ltd
T : Tata Teleservices, Tata Tele services Maharashtra
U : Unitech Group of Companies (Telenor)
V : Vodafone
Some Service Area Codes :
A : Andhra Pradesh
B : Bihar
D : Delhi
E : UP (East)
G : Gujarat
H : Haryana
I : Himachal Pradesh
J : Jammu & Kashmir
K : Kolkata
L : Kerala
M : Mumbai
N : North East
O : Orissa
P : Punjab
R : Rajasthan
S : Assam
T : Tamilnadu including ?Chennai
V : West Bengal
W : UP (West)
X : Karnataka
Y : Madhya Pradesh
Z : Maharashtra
எடுத்துக்காட்டு
VM-AUBANK
VODAFORE MUMBAI AU BANK
JT-JIOINF-S
JIO TAMILNADU JIO INFORMATION SERVICE
JD-HDFCBK-S
JIO DELHI HDFC BANK SERVICE
VM-TANGED-S
VODAFONE MUMBAI TANGED SERVICES
AD-ADHAAR-T
AIRTEL DELHI ADHAAR TRANSACTIONS
BZ-DOPBNK-G
BSNL MAHARASHTRA DOPBNK GOVERNMENT
Department of Post Office Bank
CP-EPSERV-S
DATACOM PUNJAB EPSERV SERVICES
EPSON SERVICES
AIMSAR
APOLLO INSTITUTE OF MEDICAL SCIENCE AND RESEARCH
LICIND
LIFE INSURANCE CORPORATION OF INDIA
இது போன்ற சங்கேதக் குறியீடுகளை சரியாக புரிந்துகொண்டு தேவையான மெசேஜை மட்டும் திறந்து பார்ப்பது நல்லது. விவரங்கள் தெரியாத மெசேஜ்களை திறக்காமல் தவிர்த்து விடுவது நல்லது. அதன் மூலம் அதிலிருக்கும் லிங்குகளை தொடுதல் மற்றம் ஓடிபி களை பயன்படுத்துதல் தவிர்க்கப்படலாம்.
உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் PM SANCHAR SAATHI என்ற தளத்திற்கு உங்களுக்கு வந்திருக்கும் மெசேஜை மின்னஞ்சல் மூலம் அனுப்பி உண்மைத்தன்மை அறிந்து பிறகு பயன்படுத்தலாம். மேலதிக இணைய குற்றங்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
எச்சரிக்கையாக இருங்க… எப்போதும் …
