National Institute of Ocean Technology நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தில் மொத்தம் 30 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
டிப்ளமோ, டிகிரி மற்றும் இன்ஜினியரிங் தகுதி பெற்றவர்கள் இந்த பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள் 10.06.2026 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாகக் கலந்துகொள்ளலாம்.
டெக்னீஷியன் (டிப்ளமோ) அப்ரண்டிஸ்
மொத்த காலியிடங்கள்: 8
பிரிவுகள்:
- மெக்கானிக்கல் இன்ஜினியரிங் - 3
- எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் - 3
- எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் - 2
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ.12,000
கிராஜுவேட் அப்ரண்டிஸ்
மொத்த காலியிடங்கள்: 22
இன்ஜினியரிங் பிரிவுகள்:
- மெக்கானிக்கல் இன்ஜினியரிங் - 3
- சிவில் இன்ஜினியரிங் - 2
- எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் - 3
டிகிரி பிரிவுகள்
- B.Sc. (Chemistry / Biology / Physics)
- B.Sc. Computer Science
- BCA
- B.Com
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் பட்டப்படிப்பு அல்லது இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ.13,000
வயது வரம்பு
- டிப்ளமோ தகுதிக்கு: 18 முதல் 24 வயது வரை
- டிகிரி / இன்ஜினியரிங் தகுதிக்கு: 21 முதல் 26 வயது வரை
வயது தளர்வு
- OBC பிரிவினர் - 3 ஆண்டுகள்
- SC/ST பிரிவினர் - 5 ஆண்டுகள்
- மாற்றுத்திறனாளிகள் - 10 ஆண்டுகள்
தேர்வு முறை
இந்த அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
முதலில் NATS அதிகாரப்பூர்வ இணையதளம்-ல் பதிவு செய்ய வேண்டும். பின்னர் "National Institute of Ocean Technology" என்ற இணைப்பில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு தேதி
10.06.2026
இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.

