Friday, 04 Dec, 3.15 pm Chennai Seithigal

நேஷனல்
கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை - ரிசர்வ் வங்கி ஆளுநர்

புதுடெல்லி:

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) 4 சதவீதமாக தொடரும். இதேபோல் ரிவர்ஸ் ரெப்போ விகிதமும் 3.35 சதவீதமாக நீடிக்கும். வட்டி விகிதத்தை மாற்றாமல் நீடிக்க, நிதிக்கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக வாக்களித்தனர்.

விவசாயிகள் போராட்டத்திற்கு கமலா ஹாரிஸ் ஆதரவு - வைரலாகும் தகவல் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.71 லட்சமாக உயர்வு

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Chennai Seithigal Tamil
Top