Friday, 03 Jul, 1.39 pm Chennai Seithigal

நேஷனல்
காஷ்மீர் என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை- ராணுவ வீரர் வீரமரணம்

ஜம்மு:

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஸ்ரீநகரில் உள்ள மல்பஹ் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நள்ளிரவு பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்பு படையினரை கண்டதும் அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அவர்களது தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.

ஆனால், மோதலின் போது பாதுகாப்பு படையை சேர்ந்த வீரருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டார். ஆனால் அந்த ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ரஷிய அதிபர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி தாராவியில் மேலும் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Chennai Seithigal Tamil
Top