Thursday, 13 Aug, 9.55 pm Chennai Seithigal

தமிழ்நாடு
கூடலூர் அருகே தொழிலாளி வீட்டை உடைத்து காட்டு யானை அட்டகாசம் - பொதுமக்கள் பீதி

கூடலூர்:

கூடலூர் அருகே புளியம்பாறை பகுதியில் நேற்று அதிகாலையில் காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்தது. பின்னர் பொதுமக்கள் குடியிருப்புகளை முற்றுகையிட்டது. அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பாலசுப்பிரமணியம் என்பவரின் வீட்டை காட்டு யானை உடைத்தது. இதனால் அச்சம் அடைந்த பாலசுப்பிரமணியம் குடும்பத்தினர் கூச்சலிட்டனர்.

இதை அறிந்த கிராம மக்கள் திரண்டு வந்து காட்டு யானையை விரட்டியடிக்கும் பணியில் ஈடுபட்டனர். பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு காட்டு யானை வனத்துக்குள் சென்றது. காட்டுயானையின் தொடர் அட்டகாசத்தால் அந்த பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தேவாலா வனத்துறையினர் சேதமடைந்த வீட்டையும், அப்பகுதியில் காட்டு யானையால் சேதமடைந்த விவசாய பயிர்களை பார்வையிட்டனர். இதற்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

வெண்ணந்தூர் அருகே மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் கொரோனாவுக்கு பலி

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Chennai Seithigal Tamil
Top