Thursday, 06 Aug, 7.32 pm Chennai Seithigal

நேஷனல்
ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றம் இல்லை - ரிசர்வ் வங்கி

புதுடெல்லி:

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நாணயக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வட்டி விகிதம் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைக் குழு தனது கொள்கை முடிவை வெளியிட்டது.

அதில் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்திலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதன்மூலம் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.3 சதவீதமாக தொடர்கிறது. ரெப்போ வட்டி விகிதம் மாற்றப்படாததால் வீடு, வாகனங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.

வங்கக்கடலில் மீண்டும் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி கனமழை எதிரொலி - 46 ஆண்டு இல்லாத அளவுக்கு கொலாபாவில் கொட்டிய மழை

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Chennai Seithigal Tamil
Top