Saturday, 23 Jan, 11.48 am Cinebar

முகப்பு
மீண்டும் பிக் பாஸ் சீசன் 4 ஒளிபரப்பு.... சந்தோஷத்தில் மக்கள்...!

பிக்பாஸ் சீசன்-4 ஆனது சமீபத்தில் முடிவடைந்ததும்,அதில் நடிகர் ஆரி மக்களின் அதிகப்படியான வாக்குகளை பெற்று டைட்டிலை வென்றார்.அதன் பின் பாலாஜி ரன்னராக அறிவிக்கப்பட்டார்.கடந்த 3 சீசன்களையும் ஒப்பிடுகையில் சீசன்-4 தான் மிகவும் எரிச்சலை உண்டாக்கியதாகவும், சுவாரசியம் இல்லை என்றும் ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வந்தனர் .

இந்த நிலையில் சீசன்-4 முடிந்து ஒரு சில தினங்களே ஆன நிலையில் அடுத்த சீசனை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தொடங்கவுள்ளதாக விஜய் டிவி வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது .

மேலும் இதனை தொடர்ந்து பிக் பாஸ் 4 வது சீசன் நிகழ்ச்சியை விஜய் மியூசிக் தொலைக்காட்சியில் வருகின்ற 25-ஆம் தேதி முதல் மதியம் 2.30 மணிக்கு ரீ டெலிகாஸ்ட் செய்யவுள்ளனர். இதனால் மக்கள் தற்பொழுது உற்சாகத்தில் உள்ளனர். இதற்கான ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Cinebar
Top