தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தொடர்பாகக் கடுமையான குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “‘தம்பி, நீ எழுந்தால்தான் சண்டையே ஆரம்பிக்கிறது’ என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவிடம் நேரடியாகவே சொல்லிவிட்டேன்.
வரும் 8-ம் தேதி வரை அவர் பேச வேண்டாம். அமைதியாகச் சென்று கொண்டிருக்கும் சபை, ஆதவ் அர்ஜூனா எழுந்தவுடன் சண்டையாக மாறி 4 மணி நேரம் அதிலேயே வீணாகச் செலவாகிறது” என்று காரசாரமாகச் சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், “உங்களுடைய தனிப்பட்ட நோக்கங்களைப் பொதுக்கூட்டங்கள் அல்லது செய்தியாளர் சந்திப்பில் பேசுங்கள்; அதை விட்டுவிட்டு சட்டசபையில் பேசாதீர்கள்.
இதனை சபாநாயகரிடமும் வலுவாக வலியுறுத்தியுள்ளேன்” எனத் தெரிவித்தார். பிரேமலதா விஜயகாந்தின் இந்த நேரடியான பேச்சு மற்றும் குற்றச்சாட்டு, தமிழக அரசியல் களத்திலும் சட்டமன்ற வட்டாரத்திலும் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

