Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"அச்சப்படத் தேவையில்லை!": பன்றிக் காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் நம்பிக்கை!

"அச்சப்படத் தேவையில்லை!": பன்றிக் காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் நம்பிக்கை!

Cinema Pettai 2 weeks ago

மிழகத்தில் பரவி வரும் பன்றிக் காய்ச்சல் (Swine Flu / H1N1) பாதிப்புகள் குறித்துப் பொதுமக்கள் இடையே அச்சம் நிலவி வரும் சூழலில், சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் அதுதொடர்பாக முக்கிய விளக்கமளித்து மக்களை அமைதிப்படுத்தும் தகவலை வெளியிட்டுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், “தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவல் முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் தான் உள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் இதுகுறித்து தேவையற்ற அச்சப்படத் தேவையில்லை” என்று தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்து பாதிப்பு நிலவரம் குறித்துக் குறிப்பிட்ட அவர், “கடந்த மே மாதத்திற்கு முன்பு வரை மிகவும் குறைவாக இருந்த காய்ச்சல் பாதிப்பு, தற்போது சற்று அதிகமாகப் பதிவாகி வருகிறது. எனினும் சுகாதாரத்துறை நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தேவைப்பட்டால் நோய்ப் பாதிப்பைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் தடுப்பூசி போடுவதற்கான அனைத்துத் தகுந்த நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.

சுகாதாரத்துறை சார்பில் போதிய தடுப்பு மற்றும் சிகிச்சை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சரின் இந்த விளக்கம், பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள தேவையற்ற பீதியைப் போக்கிப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cinema Pettai Tamil