Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"பேனா வைப்பதை மறுத்த ஸ்டாலின்!": எ.வ.வேலு சட்டப்பேரவையில் தகவல் - சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் சுட்டிக்காட்டல்!

"பேனா வைப்பதை மறுத்த ஸ்டாலின்!": எ.வ.வேலு சட்டப்பேரவையில் தகவல் - சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் சுட்டிக்காட்டல்!

Cinema Pettai 1 week ago

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவாகக் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது குறித்து முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாகச் சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு முக்கியத் தகவலொன்றைப் பகிர்ந்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய எ.வ.வேலு, பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்குத் தேவையான அனைத்து மத்திய, மாநில அரசு அனுமதிகளும் கிடைத்த நிலையில், அதுகுறித்த கோப்பை அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொண்டு சென்றபோது அவர் அதை நிராகரித்ததாகக் குறிப்பிட்டார்.

“அரசின் இன்றைய பொருளாதார நிலையில் இது அவசியம் இல்லை, நிதி நிலைமை சரியான பிறகு இதைப் பற்றிப் பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறி ஸ்டாலின் அப்போது பேனா நினைவுச் சின்னம் வைப்பதை மறுத்துவிட்டதாக எ.வ.வேலு அவையில் தெரிவித்தார்.

அதேவேளையில், குறுக்கிட்டுப் பேசிய சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், “அன்றைய காலகட்டத்தில் அந்தப் பேனா நினைவுச் சின்னத் திட்டத்திற்கு எழுந்த கடுமையான எதிர்ப்புகளையும் நீங்கள் சுட்டிக்காட்ட வேண்டும்” என நினைவுறுத்தினார். சட்டப்பேரவையில் எ.வ.வேலு மற்றும் சபாநாயகர் இடையேயான இந்த விவாதம் அரசியல் தளத்தில் மீண்டும் கவனத்தைப் பெற்றுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cinema Pettai Tamil