அமெரிக்கா - கனடா எல்லையில் அமைந்துள்ள புகழ்பெற்ற 'அண்டாரியோ ஏரிக்கு' (Lake Ontario) 'அமெரிக்கா ஏரி' (Lake America) என பெயர் மாற்றம் செய்து அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
டிரம்பின் இந்த அதிரடி அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்பின் இந்தத் தன்னிச்சையான நடவடிக்கைக்குக் கனடா பிரதமர் மார்க் கார்னி தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஏரியின் பெயரை மாற்றியது குறித்துப் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
“இந்த பெயர் மாற்றத்தின் மூலம் கனடா நாட்டிற்கு என்ன செய்தி தெரிவிக்க விரும்புகிறீர்கள்?” எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “எந்த செய்தியும் இல்லை” என்று டிரம்ப் சுருக்கமாகப் பதிலளித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் கனடா இடையே எல்லைப் பகிர்வு குறித்து ஏற்கெனவே பல்வேறு விவாதங்கள் நிலவி வரும் சூழலில், டொனால்ட் டிரம்பின் இந்த பெயர் மாற்ற அறிவிப்பும் அதற்குக் கனடா பிரதமர் தெரிவித்துள்ள எதிர்வினையும் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பையும் புதிய விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

