Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"இடத்தை வித்து செலவு செஞ்ச தலைவர்!": சொந்தப் பணத்தில் மகளிர் உரிமைத்தொகை? - பெண் பேசிய வீடியோ இணையத்தில் வைரல்!

"இடத்தை வித்து செலவு செஞ்ச தலைவர்!": சொந்தப் பணத்தில் மகளிர் உரிமைத்தொகை? - பெண் பேசிய வீடியோ இணையத்தில் வைரல்!

Cinema Pettai 1 week ago

மிழக முதலமைச்சர் விஜய் ஆட்சிக் பொறுப்பேற்று 100 நாட்கள் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில், அவரைப் பற்றிப் பெண் ஒருவர் பேசியுள்ள கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அந்த வீடியோவில் பேசும் பெண், “முதலமைச்சர் விஜய் ஆட்சிக்கு வந்து வெறும் 100 நாட்கள்தான் ஆகிறது. அதற்குள் அவரால் அரசின் கஜானாவை முழுமையாக நிரப்ப முடியாது. அதனால் தான் தனது சொந்தப் பணத்தில் மகளிர் உரிமைத்தொகை போன்ற திட்டங்களுக்கு நிதி வழங்கி வருகிறார்.

தனது சொந்த நிலத்தை விற்றுத்தான் மக்கள் நலத் திட்டங்களைச் செய்து வருகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதற்கு முன்பு இருந்த எந்தவொரு முதலமைச்சரும் இதுபோன்று தனது சொந்தச் சொத்தை விற்று மக்களுக்குச் செய்தது இல்லை என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அப்பெண் பேசிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அரசியல் களத்திலும் சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோ வைரலாகி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cinema Pettai Tamil