Thursday, 06 Aug, 12.46 pm Cinema Pettai

செய்திகள்
International Football டீமுக்கே நம்ம வாத்தி கம்மிங் தான் Anthem.. கொல மாஸ் காட்டிய மாஸ்டர் விஜய்!

சமீபகாலமாக விஜய்யின் புகழ் வெளிநாடுகளிலும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. படத்திற்கு படம் வெளிநாடு மார்க்கெட்டுகளில் தன்னுடைய வசூலை உயர்த்தினார்.

கடைசியாக வந்த பிகில் படம் இதுவரை இல்லாத அளவுக்கு வெளிநாடுகளில் பெரிய அளவு வசூல் செய்து விஜய்யின் சினிமா மார்க்கெட்டுக்கு பெரிய அளவு உதவியது.

அதனைத் தொடர்ந்து அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

படத்தின் பாடல்கள் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் உலக அளவில் உள்ள ரசிகர்களையும் குத்தாட்டம் போட வைத்துள்ளது.

இன்னும் ஒருபடி மேலே சென்று இன்டர்நேஷனல் ஃபுட்பால் டீம் ஒன்றின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் விஜய்யின் வாத்தி கம்மிங் எனும் பாடலின் வாசகத்தை பயன்படுத்தி அந்த டீமின் கோச் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

இது பல ரசிகர்களுக்கு வயிற்று எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரென்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Cinema Pettai Tamil
Top