Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"முறையான விசாரணை!": கடந்த ஆட்சியில் நடந்த ஊழல் வழக்குகள் பதிவான பின் முதல்வர் விஜய் அறிவிப்பார் - அமைச்சர் நிர்மல்குமார் தகவல்!

"முறையான விசாரணை!": கடந்த ஆட்சியில் நடந்த ஊழல் வழக்குகள் பதிவான பின் முதல்வர் விஜய் அறிவிப்பார் - அமைச்சர் நிர்மல்குமார் தகவல்!

Cinema Pettai 1 week ago

டந்த ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பான வழக்குகள் மற்றும் விசாரணைகள் அனைத்தும் சட்டப்படி முறையான வழியில் நடைபெற்று வருவதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், முந்தைய ஆட்சியின் போது நடந்த முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

“கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல் தொடர்பான விசாரணை மிகவும் நேர்மையாகவும் முறையான முறையிலும் நடைபெற்று வருகிறது; அனைத்து ஊழல் வழக்குகளும் முழுமையாகப் பதிவான பிறகு, அவ்வழக்குகளின் விவரங்கள் மற்றும் அடுத்து எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்” என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.

சட்ட நடவடிக்கைகளில் எவ்வித அவசரமும் காட்டாமல், ஆதாரங்களின் அடிப்படையில் அனைத்து ஊழல் வழக்குகளையும் சட்டப்பூர்வமாகப் பதிவு செய்து தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cinema Pettai Tamil