Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"சைக்கிள்களுக்கு டெண்டர்!": 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு 5.32 லட்சம் புதிய சைக்கிள்கள் - ₹277 கோடியில் புதிய வசதிகளுடன் அரசு நடவடிக்கை!

"சைக்கிள்களுக்கு டெண்டர்!": 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு 5.32 லட்சம் புதிய சைக்கிள்கள் - ₹277 கோடியில் புதிய வசதிகளுடன் அரசு நடவடிக்கை!

Cinema Pettai 1 week ago

மிழகத்தில் 11-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட இருக்கும் 5.32 லட்சம் புதிய சைக்கிள்களை ரூ.277 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்வதற்கான அதிகாரப்பூர்வ டெண்டர் தற்போது கோரப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் வெளியிட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களின் பயண வசதியை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தில், இந்த ஆண்டு மாணவர்களின் பாதுகாப்பிற்கும் தேவைகளுக்கும் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிதிநிலை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவாறே, புதியதாக வழங்கப்படும் சைக்கிள்களில் மாணவர்களின் பாதுகாப்புக்கான ஹெல்மெட் வைக்கும் சிறப்பு இடமும், குடிநீர் பாட்டில் வைப்பதற்கான பிரத்யேக வசதியும் அமைத்து வழங்கப்பட உள்ளது.

கல்வியையும் மாணவர் நலனையும் ஊக்குவிக்கும் வகையில் கூடுதல் வசதிகளுடன் கூடிய இந்த புதிய இலவசச் சைக்கிள்கள் விரைவில் கொள்முதல் செய்யப்பட்டுப் பள்ளி மாணவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட இருப்பது, பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cinema Pettai Tamil