தமிழகச் சட்டமன்றத்தில் உள்கட்டமைப்பு மற்றும் தொழிற்துறை வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் பல முக்கியக் திட்டங்களை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
மாநிலத்தின் மின்தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் புதிதாக 196 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும், 15 ஆயிரம் கி.மீ. நீள மின் பாதை அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தூத்துக்குடியில் 1660 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்கப்பட உள்ளதுடன், சென்னை மின் பகிர்மான மேம்பாட்டுக்காக ரூ.1672 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப மற்றும் நிதித்துறையை வலுப்படுத்தும் நோக்கில், காஞ்சிபுரம் மதுரமங்கலத்தில் அதிநவீன செமி கண்டக்டர் பூங்காவும், கோவையில் ரூ.400 கோடியில் டிஜிட்டல் நிதி மையமும் அமைக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் மின்சாரம் மற்றும் தொழிற்துறை உள்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் சட்டமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த முக்கிய அறிவிப்புகள் பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

