Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா திடீர் ஒத்திவைப்பு!

ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா திடீர் ஒத்திவைப்பு!

Cinema Pettai 8 hrs ago

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு திடீரென வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக, இன்று மாலை மிக பிரம்மாண்டமாக நடைபெறவிருந்த திமுகவின் 'முப்பெரும் விழா' ஒத்திவைக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட தகவலில், முதலமைச்சருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளதாகவும், எனவே தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் நலனைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆண்டுதோறும் திமுக சார்பில் திராவிட இயக்கத் தலைவர்களின் நினைவைப் போற்றும் வகையிலும் கட்சி மாநாடாகவும் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படும் இந்த முப்பெரும் விழாவிற்காக மாநிலம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் வருகை தரத் தயாராக இருந்த சூழலில், இந்த திடீர் ஒத்திவைப்பு அறிவிப்பு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் விரைந்து குணமடைந்து பூரண உடல்நலத்துடன் திரும்ப வேண்டும் என்று திமுக தொண்டர்களும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

ஒத்திவைக்கப்பட்ட இந்த முப்பெரும் விழா மீண்டும் என்றைக்கு நடைபெறும் என்பது குறித்த புதிய தேதி மற்றும் விவரங்கள் முதலமைச்சரின் உடல்நிலை சீரான பிறகு, கட்சித் தலைமை சார்பில் பின்னர் முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் துரைமுருகன் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cinema Pettai Tamil