நம்மைக் ஆளாக்கி வளர்த்த தாய் தந்தையரைக் கைவிட்டு முதியோர் இல்லங்களில் சேர்க்கும் மனநிலை சமுதாயத்தில் குறைய வேண்டும் எனச் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், பெற்றோரைக் கவனித்துக் கொள்வதிலும் மதிப்பளிப்பதிலும் இளைய தலைமுறையினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“நம்மைப் பெற்று வளர்த்த தாய் தந்தையை முதியோர் இல்லத்தில் விடும் நிலை சமுதாயத்தில் முற்றிலும் குறைய வேண்டும்; அவர்களை அன்போடு அரவணைத்துப் பாதுகாப்பதே உண்மையான கடமை” என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.
சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் வெளியிட்டுள்ள இந்த மனிதநேயமிக்க மற்றும் சிந்தனைக்குரிய கருத்துக்கள், சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பையும் பாராட்டைப் பெற்று வருகின்றன.

