அயோத்தி ராமர் கோயில் கட்டட நிதிக்காக வழங்கப்பட்ட ரூ. 4 கோடி மதிப்புள்ள பிரம்மாண்ட காசோலை (செக்), கணக்கில் போதுமான பணம் இல்லாத காரணத்தால் வங்கியால் திருப்பியனுப்பப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்மணி இந்த ரூ. 4 கோடிக்கான காசோலையை அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை நிதிக்காக அனுப்பி வைத்துள்ளார். ஆனால், அந்த காசோலையை வங்கியில் செலுத்திச் சரிபார்த்தபோது, சம்பந்தப்பட்ட பெண்மணியின் வங்கி கணக்கில் வெறும் ரூ. 3 மட்டுமே இருந்தது தெரியவந்து வங்கி அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்தது.
போதிய பண இருப்பு இன்றி இவ்வளவு பெரிய தொகையிலான காசோலையை வழங்கியதன் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன என்பது குறித்துத் தீவிரமாக விசாரிக்குமாறு வங்கி அதிகாரிகளுக்கும் துறை சார்ந்த அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வினோத மற்றும் அதிர்ச்சி சம்பவம் ஆன்மீக அன்பர்களிடையேயும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளையும் பரப்பரப்பையும் உருவாக்கியுள்ளது.

