Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"விரைந்து முடிக்க உத்தரவு!": சென்னையில் இம்மாத இறுதிக்குள் மழைநீர் வடிகால் பணிகளை நிறைவு செய்ய தலைமைச் செயலாளர் சாய்குமார் ஆணை!

"விரைந்து முடிக்க உத்தரவு!": சென்னையில் இம்மாத இறுதிக்குள் மழைநீர் வடிகால் பணிகளை நிறைவு செய்ய தலைமைச் செயலாளர் சாய்குமார் ஆணை!

Cinema Pettai 1 week ago

டகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகச் சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை பணிகளை விரைவுபடுத்தும் வகையில் தலைமைச் செயலாளர் சாய்குமார் உயர் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

தலைநகர் சென்னையில் நடைபெற்று வரும் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் தூர்வாரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய தலைமைச் செயலாளர், இம்மாத இறுதிக்குள் அனைத்து மழைநீர் வடிகால் பணிகளையும் முழுமையாக முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

மேலும், பருவமழையின் போது ஆறுகளின் முகத்துவாரத்தில் வெள்ளநீர் எவ்விதத் தடையுமின்றி கடலில் போய் சேரும் வகையில் அங்குள்ள அடைப்புகளை உடனடியாக அகற்றி தூர்வார வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் கட்டளையிட்டுள்ளார்.

மழைக்காலத்தில் சென்னையில் எங்கும் வெள்ள நீர் தேங்கக் கூடாது என்பதையும், பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படக் கூடாது என்பதையும் உறுதி செய்யும் நோக்கில், தலைமைச் செயலாளர் சாய்குமார் பிறப்பித்துள்ள இந்தத் தீவிர உத்தரவு, மாநகராட்சி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடையே களப்பணிகளை மேலும் முடுக்கிவிட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cinema Pettai Tamil