ட்ரிப் மற்றும் தூக்குதுரை ஆகிய படங்களை இயக்கிய டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'மனிதன் தெய்வமாகலாம்'.இயக்குநர் செல்வராகவன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் குஷி ரவி நாயகியாக நடித்திருக்கிறார்.
தயரிப்பாளர் சதீஷ் மற்றும் நடிகை கெளசல்யா ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன், மைம் கோபி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஏ.கே.பிரியன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கே.ரவிவர்மா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.தீபக் எஸ்.துவாரக்நாத் படத்தொகுப்பு செய்ய,பாக்யராஜ் வெள்ளையன் கலைஇயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார்.
இப்படத்தை, வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சக்தி பிலிம் பேக்டரி சார்பில் பி.சக்திவேலன் இப்படத்தை வெளியிடுகிறார்.
இந்தநிலையில், 'மனிதன் தெய்வமாகலாம்' படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 2 ஆம் தேதி, சென்னை, பிரசாத்லேபில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய செல்வராகவன்….
முதலில் சக்தி பிலிம் ஃபேக்டரி பற்றி சொல்லணும்.நான் அவர்களின் படங்களை எப்போதுமே கவனித்துப் பார்த்திருக்கிறேன்.மிகவும் தேர்ந்தெடுத்து படங்களை தயாரிப்பார்கள்,ஆனால் எதை எடுத்தாலும் அதைப் பெரியஅளவில்,தரமாக மக்கள்முன் கொண்டு சேர்ப்பார்கள்.அந்தபேனரில் ஒருபடத்தில் நான் இருக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.அதற்காக மிக்கநன்றி சார்.
இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு ஷூட்டிங்கிற்குப் போனபோது ஒரு விசயம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.எல்லோரும் ஓய்வில்லாமல் தொடர்ந்து வேலை செய்துகொண்டே இருந்தார்கள்.ஒருவித அதிரடியான உழைப்பு அந்தசெட்டில் இருந்தது.சிலநேரங்களில்,இவர்கள் எப்போது சாப்பிடுறாங்க,எப்போது ஓய்வு எடுக்குறாங்க என்றுகூட யோசித்திருக்கேன்.அந்தஅளவுக்கு முழுஅர்ப்பணிப்புடன் இந்தப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் டென்னிஸ்.அந்த அசாதாரண உழைப்புக்கு கண்டிப்பாக நல்லபலன் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.
தயாரிப்பாளர் சார் பற்றி சொல்லணும்னா,ஆரம்பத்தில் அவரை நான் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கவில்லை.ஆனால் பின்னர் பார்த்தபோது,இந்தப்படத்திற்கு அவர் கொடுத்த ஆதரவு மிகப்பெரியது.எங்களுக்கு முழுமையான சப்போர்ட் கொடுத்து,இந்ததிட்டத்தை சிறப்பாக நிறைவேற்ற உதவியிருக்கிறார்.அதற்காக என் நன்றி.
இசை பற்றி சொல்லணும்னா,நான் சிலவரிகள் மட்டும் கேட்டவுடனே "யார் இந்த இசையமைப்பாளர்?" என்று கேட்கவைத்தது.அந்தஅளவுக்கு இசை மிகவும் இனிமையாகவும்,தரமாகவும் இருந்தது.இந்தப்படத்திற்கு அருமையான இசையைக் கொடுத்திருக்கிறார்.அவருக்கு என் பாராட்டுகள்.அதேபோல்,இந்தப்படத்தில் உழைத்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்கள் பங்களிப்பை மிகச்சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.அனைவருக்கும் என் நன்றி.
கௌசல்யா மேம் பற்றி சொல்லணும்னா,திரையில் பார்த்த அளவுக்குக் கூட,நேரில் இன்னும் அமைதியான,மென்மையான மனிதர். அவருடன் பணியாற்றியது ஒரு நல்லஅனுபவம்.அதற்கு முழுக்க எதிர்மாறாக குஷி,அவங்க எங்க இருந்தாலும் அந்தஇடமே சந்தோசமா இருக்கும்.எப்போதும் சிரிப்புடன் இருப்பது ஒரு பெரியவரம்.அந்த எனர்ஜி எல்லாருக்கும் பரவுவது இந்தப்படத்திலும் தெரியும். மொத்தத்தில்,இது ஒரு அருமையான டீம்.இந்தக்குழு இன்னும் பெரிய உயரத்தை அடையவேண்டும் என்று நான் மனதார வாழ்த்துகிறேன். நன்றி என்றார்.
நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சதீஷ் பேசுகையில்…..
வந்திருக்கும் அனைத்து பத்திரிகை,ஊடகத்துறை மற்றும் சமூகவலைதள நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம்.நிறைய விசயங்கள் பேசலாம் என்று நினைத்திருந்தேன்.ஆனால், பிரியன் சொன்ன அந்தப்பாடல் என்னைக் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுத்திவிட்டது.அந்தப்பாடலை நான் கேட்கும்போது எப்போதும் என் அம்மா நினைவுக்கு வருவார்.இன்று என் அம்மா என்னுடன் இல்லை.சிறுவயதிலிருந்தே என்னை திரையில் பார்க்கவேண்டும் என்பது அவருடைய ஆசை.அது பலஆண்டுகளாக இருந்த ஒரு கனவு.எனக்கும் சினிமாவில் ஒரு நல்லஇடம் பிடிக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது.ஆனால் பொறுப்புகள் காரணமாக நான் கார்ப்பரேட் வாழ்க்கையில் இருந்தேன்.இருந்தாலும் அந்தஆசை உள்ளுக்குள் எப்போதும் இருந்துகொண்டே இருந்தது.பலரும் சொல்லுவதுபோல, நாம் மனதில் நினைக்கும் விசயம் ஒருநாள் நிச்சயம் நடக்கும்.அதுபோலதான் எனக்கும் இந்தவாய்ப்பு வந்தது.ஒருகட்டத்தில்,இதை முழுநேரமாக செய்யவேண்டும் என்று முடிவுசெய்து இந்தப்பயணத்தில் இறங்கினேன்.
ஒரு நேர்காணலில் சூப்பர்ஸ்டார் ரஜினிசார் சொன்ன ஒரு விசயம் எனக்கு நினைவுக்கு வருகிறது.நாம் எதையாவது உண்மையிலேயே விரும்பினால்,சரியான நேரமும்,சரியான மனிதர்களும் சேரும்போது முழுஉழைப்புடன் முயற்சிசெய்தால் அதை நிச்சயம் அடையலாம். அந்தவார்த்தைகள் இந்தப்பயணத்தில் உண்மையாகியிருக்கின்றன.இந்தப்படத்தைப் பற்றிப் பேசும்போது முதலில் டென்னிஸ் மஞ்சுநாத் பற்றி சொல்லவேண்டும்.அவர் எனக்கு சகோதரன் போன்றவர்.கடந்த 15 ஆண்டுகளாக நாங்கள் ஒன்றாகப் பயணித்துவருகிறோம். அவரின் மூலம் தீபக்,ரவி,சித்து ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது.ஆரம்பத்தில் குறும்படங்களில் இணைந்து பணியாற்றிய அனுபவம் இந்தநாளை உருவாக்கியது.
எனக்கு சினிமாவில் முதல்வாய்ப்பை கொடுத்தவர் சசிகுமார் சார்.'கிடாரி' படத்தில் ஒரு சிறியகதாபாத்திரத்தில் நடித்தேன்.அந்தவாய்ப்பை நான் எப்போதும் நன்றியுடன் நினைவில் வைத்திருக்கிறேன்.இந்தப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உருவான கதை.இது ஒரு உண்மைசம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.அதைப்பற்றி ஆராய்ந்தபோது,இதுபோன்ற சம்பவங்கள் பலஇடங்களில் நடந்திருக்கின்றன என்பதைக் கண்டறிந்தோம்.அது எங்களை ஆச்சரியப்படுத்தியது.அதனால் இந்தக்கதையை மிகவும் பொறுப்புடன் எடுத்துக்கொண்டு,சரியானமுறையில் சொல்லவேண்டும் என்று தீர்மானித்தோம்.
அப்போது இந்தக்கதையை செல்வா சாரிடம் கொண்டுபோவோம் என்று முடிவுசெய்தோம்.அவர் ஒப்புக்கொண்டால் மட்டுமே இந்தப்படத்தை எடுக்கவேண்டும் என்று நாங்கள் தீர்மானித்திருந்தோம்.அவர் 'ஆம்' என்ற ஒரேவார்த்தை இந்தப்படத்திற்கு உயிர்கொடுத்தது.அதற்காக அவருக்கு எங்களின் மனமார்ந்த நன்றி.அவர் இணைந்தபிறகு,இந்தப்படத்தின் தரம் இன்னும் உயரவேண்டும் என்ற பொறுப்பு எங்களுக்குள் உருவானது.எந்தவிசயத்தையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல்,மிகுந்த கவனத்துடன் இந்தப்படத்தை உருவாக்கினோம்.சேலம் உள்ளிட்ட இடங்களில் உண்மையான லொகேஷன்களில் படமாக்கி,தொழில்நுட்ப ரீதியாகவும் சிறந்த முயற்சிகளை செய்தோம்.
இந்தப்படத்தில் நடித்த குஷிரவி அவர்களின் நடிப்பு மிகவும் பாராட்டத்தக்கது.மொழி மாற்றத்தையும் கடந்து,மிகுந்த உணர்வுடன் நடித்திருக்கிறார்.அவருக்கு தமிழ்சினிமாவில் நல்ல எதிர்காலம் இருப்பது உறுதி.கௌசல்யா மேடம் இந்தக்கதாபாத்திரத்திற்காக முழுமையாக தன்னை மாற்றிக்கொண்டார்.டி-கிளாமர் லுக்கில்,அந்தக் கதாபாத்திரத்திற்கு தேவையான உண்மைத்தன்மையை மிகஅழகாக வெளிப்படுத்தியுள்ளார்.மைம்கோபிசார் பற்றிச் சொல்லவேண்டியதில்லை.அவருடைய நடிப்பு இந்தக்கதாபாத்திரத்திற்கு மிகச்சிறப்பாகப் பொருந்தியுள்ளது.அவர் இல்லாமல் இந்தக்கதாபாத்திரத்தை நினைத்துப் பார்க்கமுடியாது.ஒய்ஜிமகேந்திரன்சார் போன்ற மூத்தகலைஞர்கள் இந்த யங்டீமுடன் இணைந்து மிகஎளிமையாகப் பணியாற்றியது எங்களுக்குப் பெருமை.செல்வாசார் உடன் பணியாற்றிய ஒவ்வொருநாளும் எனக்கு ஒருபாடமாக இருந்தது.அவருடைய அனுபவம் இந்தப்படத்தின் தரத்தை இன்னும் உயர்த்தியது.
இந்தப்படம் ஏன் தியேட்டரில் பார்க்கவேண்டும் என்றால்,இது ஒரு உண்மைசம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.ஒரு கிராமத்தின் வாழ்க்கை,மனிதஉறவுகள்,உணர்வுகள் அனைத்தையும் எதார்த்தமாகச் சொல்லும் ஒருபடம்.ஒளிப்பதிவு,எடிட்டிங்,பின்னணிஇசை ஆகிய அனைத்தும் இந்தக்கதையை இன்னும் உயர்த்தியுள்ளது.இந்தப்படம் குடும்பத்தோடு பார்க்கக்கூடியது.அனைவரும் குடும்பத்துடன் தியேட்டருக்கு வந்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், இந்தப்பயணத்தில் எங்களுடன் இருந்த அனைத்து தயாரிப்பாளர்கள்,தொழில்நுட்பக் கலைஞர்கள்,நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி.யாராவது பெயரை தவறவிட்டிருந்தால் மன்னிக்கவும்.இந்தப்படத்தில் உழைத்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.மீண்டும் ஒருமுறை,இந்தப்படத்தை மக்களிடம் கொண்டுசேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி என்றார்.
நடிகை கௌசல்யா பேசுகையில்….
இங்கு வந்திருக்கும் அனைத்து மதிப்பிற்குரிய விருந்தினர்களுக்கும்,ஊடகநண்பர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள்.இன்று இந்தமேடையில் பேசுவதற்கு மிகவும் மகிழ்ச்சியாகவும்,ஒருவித பெருமையாகவும் இருக்கிறது.இங்கு இருக்கும் ஒவ்வொருவரும் மிக முக்கியமானவர்கள்,உங்கள் அனைவரின் வருகையும் என்னை உண்மையிலேயே நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
முதலில் இயக்குநர் டென்னிஸ் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்.இந்தப்படத்தில் எனக்கு மிகவும் அழகான மற்றும் வலுவான கதாபாத்திரத்தை உருவாக்கி அளித்ததற்கு மிக்கநன்றி.இந்தப்படத்தின் தீவிரத்தையும்,அதன் உணர்ச்சிப்பூர்வமான களத்தையும் நம்பித்தான் நான் இந்தப்படத்தில் இணைந்தேன்.அடுத்து தயாரிப்பாளர்கள் சதீஷ்சார் மற்றும் விஜயாமேம் அவர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி.உங்கள் திட்டமிடல்,ஒழுங்கு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக இந்தப்படத்தை சிறப்பாக முடிக்கமுடிந்தது.உங்களைப் போன்ற தயாரிப்பாளர்கள் அதிகமாக இருந்தால்,தமிழ்சினிமா இன்னும் உயர்ந்தநிலையை அடையும் என்பது என் நம்பிக்கை.
செல்வா சார்,உங்களுடன் இணைந்து நடிப்பது எளிதான விசயம் அல்ல.ஆனால் நீங்கள் கொடுத்த அந்த கம்பர்ட் மற்றும் ஆதரவு காரணமாக பல விசயங்கள் மிகவும் இயல்பாக அமைந்தது.அதற்காக மிக்கநன்றி.குஷி,பெங்களூரிலிருந்து வந்து முழுஅர்ப்பணிப்புடன் இந்தப்படத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவு மிகவும் பாராட்டத்தக்கது.உங்கள் கடினஉழைப்புக்கு மனமார்ந்த நன்றி.ஒரு பெரியவிசயத்தை அழகாகக் காட்சிப்படுத்துவது சுலபம்.ஆனால் ஒரு எளியவிசயத்தை அழகாகக் காட்சிப்படுத்துவதுதான் உண்மையான சவால்.அந்த சவாலை நம்முடைய ஒளிப்பதிவாளர் ரவிவர்மா அவர்கள் மிகச்சிறப்பாகச் செய்து காட்டியுள்ளார். அவருக்கு என் நன்றி.
இசையமைப்பாளர் ஏ.கே.பிரியன் அவர்களை இன்றுதான் நேரில் சந்தித்தேன்.இது அவர்களின் முதல்படம் என்று சொன்னார்கள். ஆனால் அதை உணரமுடியாத அளவுக்கு பாடல்கள் அனைத்தும் அருமையாக இருந்தது.நீண்டநாட்களுக்குப் பிறகு நான் நடனமாடியது அவர்களின் இசைக்காகத்தான்.அந்தஅளவுக்கு இனிமையான இசையை வழங்கியதற்கு நன்றி.
இங்கு வந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.இறுதியாக,எங்கள் முழுகுழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.வரும் ஏப்ரல் 10ஆம் தேதி இந்தப்படம் வெளியாகிறது.இது முழுகுடும்பமும் சேர்ந்து இரசிக்கக்கூடிய ஒரு சிறந்த திரைப்படம்.கண்டிப்பாக அனைவரும் பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
நடிகை குஷிரவி பேசுகையில்….
இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள்.சிலவிசயங்களை தவறவிடாமல் சொல்லவேண்டும் என்பதால்,நான் சிறியகுறிப்புகளை எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன்.ஏதேனும் தவறு இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.'மனிதன் தெய்வமாகலாம்' என் முதல் தமிழ்த்திரைப்படம் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.இந்தப்படத்தை அனைவரும் விரும்பி பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன்.இது முழுகுடும்பமும் சேர்ந்து இரசிக்கக்கூடிய ஓர் அழகான திரைப்படம்.
முதலில் செல்வராகவன் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.இந்தப்படத்தில் என் நடிப்பை சிறப்பாக வெளிக்கொண்டு வந்த இயக்குநர் டென்னிஸ் அவர்களுக்கு என் நன்றி.என் தயாரிப்பாளர்கள் விஜயாமேடம் மற்றும் சதீஷ்சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.என்னுடன் நடித்த அனைத்து நடிகர்,நடிகைகளுக்கும் என் நன்றி.
இந்தப்படத்திற்காக உழைத்த ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞருக்கும் மற்றும் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இசையமைப்பாளர் பிரியன் அவர்களுக்கு எனது சிறப்பு வாழ்த்துகள்.இசை மிகவும் அருமையாக வந்துள்ளது.இறுதியாக,அனைவரும் கண்டிப்பாக திரையரங்குகளில் இந்தப்படத்தைப் பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
தயாரிப்பாளர் கதிரேசன் பேசுகையில்….
இந்தஅளவுக்கு சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட மேடையும்,திரையுலகப் பிரபலங்கள் ஒன்றுகூடியதற்கும் முக்கியகாரணம் தயாரிப்பாளர் விஜயாசதீஷ் மற்றும் அவரது கணவர் சதீஷ்.அவர்களுக்கு தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் நன்றி.இயக்குநரை மேடையில் பாராட்டிய விஜயா சதீஷின் அணுகுமுறை குறிப்பிடத்தக்கது.ஒரு தயாரிப்பாளர்-இயக்குநர் உறவு வெற்றிகரமாக அமைந்தால்,அது படத்தின் தரத்திலும் வெற்றியிலும் பிரதிபலிக்கும்.தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் உறவை "கணவன்-மனைவி" உறவுக்கு இணையானது.இருவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நல்ல படைப்பு உருவாகும்.
இன்றைய காலகட்டத்தில் திரைப்பட தயாரிப்பாளர்கள் குறைந்துவரும் நிலையில்,குறைந்த செலவில் தயாராகும் சிறியபடங்களே அதிகவெற்றி பெற்று வருகின்றன.சமீபகாலத்தில் 5 முதல் 15 கோடிரூபாய் செலவில் உருவான படங்களே வெற்றியைப் பதிவுசெய்துவருவது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து படத்தை சிறப்பாக உருவாக்கியவிதம் பாராட்டத்தக்கது.அவர் தொடர்ந்து இதேநேர்மையுடன் செயல்பட்டால்,திரையுலகில் மேலும் பலவெற்றிகளைப் பெறுவார்.
இசையமைப்பாளர் ஏ.கே. பிரியன் அமைத்த பாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளன.குறிப்பாக "தங்க ரத்தினமே" மற்றும் "கலங்காதே ராசா" போன்ற பாடல்கள் குடும்பஉணர்வுகளை அழகாக வெளிப்படுத்துகின்றன.பாடலாசிரியர் விக்னேஷ் எழுதிய வரிகள் உணர்ச்சி மற்றும் குடும்பபாசத்தை நன்கு பிரதிபலிக்கின்றன.
இது ஒரு முழுமையான குடும்பக்கதையாக உருவாகியுள்ளது.குடும்பஉறவுகளை மையமாகக் கொண்டு பயணிக்கும் இந்தப்படம் பார்வையாளர்களிடம் நல்லவரவேற்பைப் பெறும்.செல்வராகவன் நடித்துள்ள கதாபாத்திரம் குடும்பப்பின்னணியில் வலுவாக அமைந்துள்ளது.நடிகை கௌரிகிஷனின் நடிப்பு இயல்பாக இருக்கிறது.
நீண்டநாட்களுக்குப் பிறகு ஒரு முழுமையான குடும்பஉணர்வு கொண்ட இந்தப்படம் பெரியவெற்றியைப் பெறும் என்றார்.
தயாரிப்பாளர் கமலக்கண்ணன் பேசுகையில்….
மனிதன் தெய்வமாகலாம் கண்டிப்பாக ஆகலாம்,அது எப்படி என்றால்? ஒரு தயாரிப்பாளருக்கு உண்மையான கடவுள் பார்வையாளர்கள்தான்.தியேட்டருக்குப் போய் படம்பார்த்து அதை வெற்றிபெறச் செய்தால்,"என்னை காப்பாற்றியது நீங்கள்தான்" என்று தயாரிப்பாளர் பார்வையாளர்களை கடவுளாகக் கருதுவார்.அதனால்,அனைவரும் கண்டிப்பாக திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்க்கவேண்டும்.
படங்களை மொபைல் போன்றவற்றில் பார்க்காமல்,தியேட்டரில் பார்த்தால்தான் அதன் முழுஅனுபவம் கிடைக்கும்.நாம் நேரில் சென்று படம்பார்த்தால்,அந்தப்படம் வெற்றி பெறும்.அப்போது தயாரிப்பாளர்,"என்னைக் காப்பாற்றியது இந்த ஆடியன்ஸ்தான்" என்று பெருமையுடன் கூறுவார்.அடுத்ததாக,பத்திரிகையாளர்களும் ஒருபடத்தின் வெற்றியில் முக்கியபங்கு வகிக்கிறார்கள்.அவர்கள் செய்தி மற்றும் விளம்பரத்தின் மூலம் படத்தை மக்களிடம் கொண்டுசெல்கிறார்கள்.அதனால்,பார்வையாளர்களுக்கு அடுத்தபடியாக பத்திரிகையாளர்களையும் "கடவுள்" என்று சொல்லலாம்.
இங்கு கலந்துகொண்ட நடிகர்கள் மற்றும் இளம்கலைஞர்களின் திறமை மிகவும் பாராட்டத்தக்கது.குறிப்பாக பாடல்கள் மிகஅழகாக அமைந்துள்ளன.இசையும் சிறப்பாக உள்ளது.இயக்குநர் மிகநன்றாக தனது பணியைச் செய்திருக்கிறார்.மொத்தத்தில்,இந்தக்குழு ஒரு நல்லமுயற்சியை வழங்கியுள்ளது.இந்தப்படம் கண்டிப்பாக வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.கடவுளை நினைத்து இதற்கு வாழ்த்துகள் தெரிவிக்கிறேன்.மேடையில் கலந்துகொண்ட மூத்தகலைஞர்களையும் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது.மேலும்,செல்வராகவன் அவர்கள் இந்தப்படத்தில் இருப்பது,அதன்வெற்றிக்குக் கூடுதல்பலமாக இருக்கும்.இந்தத்தயாரிப்பாளர் பார்வையாளர்களைக் கடவுளாகக் கருதுவார்.அவரை நீங்கள் காப்பாற்றவேண்டும் என்றால்,தயவுசெய்து திரையரங்குகளில் சென்று படம்பாருங்கள்.மொபைலில் பார்க்காமல்,தியேட்டரில் பார்த்து இந்தப்படத்தை வெற்றிபெறச் செய்யுங்கள்.நன்றி என்றார்.
தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர் தனஞ்செயன் பேசுகையில்….
முதலில்,தயாரிப்பாளரும் நடிகருமான சதீஷ் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஒரு கார்ப்பரேட் ப்ரொஃபஷனல் என்பது குறிப்பிடத்தக்கது.25-30 ஆண்டுகள் கார்ப்பரேட்துறையில் பணியாற்றி,அதன்பின்பு சினிமாவுக்கு வந்திருப்பது அவருடைய ஆர்வத்தையும் உறுதியையும் காட்டுகிறது.நான் பணியாற்றிய அதே ஏர்டெல் நிறுவனத்திலேயே பின்னர் இணைந்தவர் என்பதும் ஒரு சிறப்பு.ஒருநாள் வந்து "நீங்கள் என்னுடைய சீனியர்" என்று கூறிய தருணம் மிகவும் மகிழ்ச்சியளித்தது.
கார்ப்பரேட் அனுபவத்தைப் பயன்படுத்தி, திட்டமிட்ட முறையில்,சரியான பட்ஜெட்டிலும்,குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள் இந்தப்படத்தை உருவாக்கியிருப்பது பாராட்டத்தக்கது.இதற்காக இயக்குநர் டென்னிஸ் அவர்களுக்கும் வாழ்த்துகள்.அவர் மிகச்சிறப்பாக தனதுபணியைச் செய்திருக்கிறார்.படத்தின் பாடல்கள் மிகுந்த உற்சாகத்துடன் அமைந்துள்ளன.இசையமைப்பாளர் பிரியன்,குறிப்பாக புதியகுரல்களையும் புதியலிரிசிஸ்ட்களையும் பயன்படுத்தி தரமான பாடல்களை வழங்கியுள்ளார்.லைவ்நிகழ்ச்சியிலேயே அந்த எனர்ஜி உணரப்பட்டது; அதேபோல் திரையிலும் அது மக்களைக் கவரும்.இந்தப்பாடல்கள் படத்திற்கு ஒரு முக்கியபலமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இயக்குநர் டென்னிஸ் ஒரு வலுவான அணியை ஒருங்கிணைத்துள்ளார்.முழுகுழுவும் இணைந்து நல்லமுயற்சியை வழங்கியுள்ளது. இந்தப்படம் ஒரு சிறப்பான வெற்றி பெறவேண்டும் என வாழ்த்துகிறேன்.நடிகர் அணியைப் பார்த்ததும் மகிழ்ச்சி அளித்தது.ஒய்.ஜி.மகேந்திரன்,மைம்கோபி,கௌசல்யா போன்ற அனுபவம்மிக்க கலைஞர்கள் இணைந்திருப்பது படத்திற்குக் கூடுதல் வலுவாக உள்ளது.கௌசல்யா மேடம் நீண்டநாட்களுக்குப் பிறகு மேடையில் காணப்பட்டது மகிழ்ச்சியாக இருந்தது.
சமீபத்தில் பார்த்த கன்னடப்படம் 'நீதி'யில் சிறப்பாக நடித்த குஷிரவி,இந்தப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.அவருடைய வரவு தமிழ்சினிமாவில் வெற்றிகரமாக அமையும் என நம்புகிறேன்.மேலும்,தமிழ்சினிமாவின் முக்கியமான படைப்புகளை வழங்கிய இயக்குநர் செல்வராகவன் அவர்கள் இந்தப்படத்தில் ஹீரோவாக நடிப்பது பெருமையாகும்.அவர் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்திவருகிறார்;தொடர்ந்து பல நல்லபடங்களில் அவரைப் பார்க்கமுடிகிறது.எதிர்காலத்தில் அவரிடமிருந்து மேலும் பலமுக்கியமான படங்கள் வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
சதீஷ் அவர்களின் இந்தமுயற்சி மிக முக்கியமானது.தற்போதைய தமிழ்சினிமாவில்,ஒருபடம் மிகப்பெரிய வெற்றி பெறுவது அல்லது முழுமையாக நிராகரிக்கப்படுவது போன்ற நிலை உருவாகியுள்ளது.வாரம்தோறும் பலபடங்கள் வெளியாகும் நிலையில்,குறைந்தது சிலபடங்களாவது மக்கள் ஆதரவைப் பெறுவது அவசியம்.அப்படியானால்தான் துறை மேலும் வளர்ச்சி அடையும்.
'மனிதன் தெய்வமாகலாம்' படம் நல்லவரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.இப்படிப்பட்ட தரமானபடங்கள் மக்களிடம் சேர,ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் தங்களது ஆதரவை வழங்கவேண்டும் என்றார்.
தயாரிப்பாளர் விஜயா சதீஷ் அவர்களுக்கும் வாழ்த்துகள்.முதல்படமாக இருந்தாலும்,மிகுந்த நம்பிக்கையுடன் இந்தமுயற்சியை முன்னெடுத்துள்ளார்.குடும்பமாக இணைந்து இந்தப்படத்தை வழங்குவது பாராட்டத்தக்கது.சதீஷ் அவர்களின் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் பயணம் மிகப்பெரிய வெற்றியை அடையவேண்டும் என்றார்.
சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசுகையில்….
வழக்கமான ஆடியோலாஞ்ச் அல்லது பிரஸ்மீட்டிலிருந்து வித்தியாசமாக,"மனிதன் தெய்வமாகலாம்" படத்தின் பிரஸ்மீட் ஒரு குடும்பவிழாவைப் போல அமைந்திருந்தது.நிகழ்வு நடைபெறும் இடத்திலேயே,பள்ளிமாணவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் குடும்பநிகழ்ச்சியின் உணர்வோடு கலந்துகொண்டது,இந்தப்படத்தின் அணியின் ஒருமைப்பாட்டையும் அதன் நேர்மையான அணுகுமுறையையும் வெளிப்படுத்தியது.
இந்தப்படம் ஆரம்பிக்கப்பட்ட தருணத்திலிருந்தே,முழுஅணியிலும் ஒரு உற்சாகமும் ஒற்றுமையும் காணப்படுகிறது.குறிப்பாக,படத்தில் காட்டப்படும் கிராமப்புறச்சூழல் மிகநுணுக்கமாக வடிவமைக்கப்பட்டு,முழுபடமும் அதேஇடத்தில் இயற்கையாகப் படமாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.கதை,கதாபாத்திரங்கள் மற்றும் நிகழ்வுகள் எதுவும் திணிக்கப்பட்டதாக இல்லாமல்,இயல்பான ஓட்டத்தில் நகரும்விதம் படத்தின் மிகப்பெரிய பலமாக உள்ளது.
இயக்குநர் செல்வராகவன் அவர்கள்,வழக்கம்போல எளிமையான நடிப்பில் கதாநாயகனாக மிகவும் அழகாகக் காட்சியளித்துள்ளார்.சிறியகதாபாத்திரங்களிலும் தனித்துவமான முத்திரையைப் பதிக்கும் அவர்,இந்தப்படத்தில் முழுநீளக்கதாநாயகனாக மிகச்சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்.
படத்தைப் பார்க்கும் அனுபவம் மிகவும் ஈர்க்கக்கூடியதாக இருந்தது.இடைவேளையில் தயாரிப்பாளருடன் உரையாடியபோது,அவர் ஒரு கார்ப்பரேட் பின்னணியில் இருந்துவந்தவர் என்பதும் தெரிந்தது.அதேசமயம்,படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.இது ஒரு சாதாரணத் தோற்றமாக இல்லாமல்,முக்கியமான கதாபாத்திரமாக இருந்தது என்பதும் அவரது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
மைம்கோபி அவர்கள்,திரையில் வில்லன் கதாபாத்திரத்தில் வலுவாகக் காட்சியளித்துள்ளார்.இயல்பில் மிகவும் எளிமையானவராக இருந்தாலும்,திரையில் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் அவருடைய நடிப்பு சிறப்பாக உள்ளது.எதிர்காலத்தில் அவரை கதாநாயகனாகவும் பார்க்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பை இந்தப்படம் உருவாக்குகிறது.ஒய்.ஜி.மகேந்திரன் போன்ற மூத்தகலைஞர்கள்,இளம்அணியினருக்கு ஆதரவாக இணைந்திருப்பது படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது.குஷிரவி,கன்னடத்தில் வெற்றிபெற்ற நடிகையாக இருந்தாலும், தமிழில் அறிமுகமாகும் இந்தப்படத்தில் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.கௌசல்யா அவர்கள் நீண்டநாட்களுக்கு பிறகு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில்,இந்தப்படம் இயல்பான உணர்வுகளுடன் உருவாகிய தரமான படைப்பாக உள்ளது.சண்டைக்காட்சிகள் கூட மிக நிஜத்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு அம்சமும் சரியானமுறையில் அமைந்துள்ளதால்,இது ஒரு முழுமையான திரைப்படமாக உருவாகியுள்ளது.இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் அவர்களுடன் இது இரண்டாவது இணைப்பு என்பதும்,முன்பிருந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்தப்படம் மேலும் சிறப்பாக உருவாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த ரேகா மேடம் அவர்களுக்கும் பாராட்டுகள்.இந்தப்படம் ஒரு மாபெரும் வெற்றி பெறவேண்டும் என அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் என்றார்.
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பேசுகையில்…..
அனைவருக்கும் வணக்கம்.மேடையில் இருக்கும் கலைஞர்களுக்கு எனது மரியாதையான வணக்கம்.இந்தப்படம் வெற்றிபெறும் என பலரும் கூறியுள்ளனர்.எனக்கும் அது நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் அவர்கள் கதை சொல்லும்போது மிகவும் வலுவாக இருந்தது.பொதுவாக,பலகதைகள் கேட்கும்போது வலுவாகத் தோன்றினாலும்,அதை திரையில் வெளிப்படுத்தும்போது அந்ததாக்கம் குறைந்துவிடும்.ஆனால்,இந்தப்படத்தின் டிரெய்லரை பார்த்தபோது,அவர் கூறியதைவிட இன்னும் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.அதற்காக அவருக்குப் பாராட்டுகள்.
இந்தப்படம் குறிப்பாக சிலருக்கு மிகவும் முக்கியமானதாகும் - தயாரிப்பாளருக்கும்,இந்தமுயற்சியில் ஈடுபட்டுள்ள முழுஅணியினருக்கும்.இயற்கையான கதையை இயல்பாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.கதையின் முக்கிய திருப்பங்களும், கிளைமாக்ஸ் காட்சிகளும் மிகவும் தாக்கம் அளிப்பதாக இருக்கும் என நம்புகிறேன்.ஒளிப்பதிவாளர் ரவிவர்மா வழங்கிய காட்சிகள் மிகஅழகாக அமைந்துள்ளன.இசையமைப்பாளர் பிரியன் அவர்களின் இசை மிகவும் இனிமையானது.இது ஒரு சாதாரண கிராமியஇசை அல்ல;மெலடியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.அந்த மெலடி கேட்கும்போது,பழையஇசையின் நுணுக்கத்தை நினைவூட்டும் வகையில் உள்ளது.இந்த தனித்துவத்தை தொடர்ந்து பேணவேண்டும்.பாடல்வரிகளும் மிகவும் அழகாகவும்,கதைக்கு ஏற்றவாறும் அமைந்துள்ளன.இந்தப்படத்தில் நான் சில முக்கியமான காட்சிகளில் நடித்துள்ளேன்.கதை நகர்விற்கு முக்கியபங்காற்றும் அந்தக்காட்சிகள் நினைவில் நிற்கும் வகையில் இருக்கும்.நான் ஏற்றுள்ள கதாபாத்திரம் ஒரு நேர்மையான அரசியல்வாதி - இன்றைய சூழலில் இது சுவாரஸ்யமான ஒரு அம்சமாகும்.மைம்கோபி அவர்கள் மிகதிறமையான நடிகர்.அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி அளித்தது.டிரெய்லரில் சிலவினாடிகளில் கூட அந்தகிராமத்தின் உணர்வை பார்வையாளர்களிடம் கொண்டு சென்றிருப்பது, இந்தப்படத்தின் மிகப்பெரிய பலமாகும்.
ஒரு மனிதன் சமூகத்துக்கு எதிராக நிமிர்ந்து நிற்கும் கதைகள் எப்போதும் மக்களிடம் நல்லவரவேற்பைப் பெறும்.இந்தப்படமும் அந்தவகையைச் சேர்ந்ததாக இருப்பதால்,கண்டிப்பாக மக்கள் மத்தியில் இணையும்.மீண்டும் ஒருமுறை,இந்தப்படத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.குறிப்பாக,பிரியன் அவர்களுக்கு என் நன்றிகள்.என்பேரனுக்கு பாடும் வாய்ப்பு வழங்கியதற்காக.அது எனக்கு மிகுந்த திருப்தி அளிக்கிறது.நீண்டநாட்களுக்குப் பிறகு கௌசல்யா அவர்களை மேடையில் காணுவது மகிழ்ச்சி அளித்தது.மொத்தத்தில்,இந்தப்படம் ஒரு குடும்பத்தின் ஒருபகுதியாக இருப்பது போன்ற உணர்வை அளிக்கிறது.இந்தப்படக்குழுவில் உள்ள அனைவரும் இந்த வெற்றியைப்பெற தகுதியானவர்கள்.நன்றி.வணக்கம் என்றார்.
இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் பேசுகையில்…..
இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள்.முதலில்,நான் சொல்லவேண்டிய பலவிசயங்களை ஏற்கனவே தயாரிப்பாளர் சதீஷ்சார் அழகாகக் கூறிவிட்டார்.அதனால் சிலரின் பெயரை மட்டும் குறிப்பிட்டு மற்றவர்களைத் தவறவிட விரும்பவில்லை.இந்தப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
இந்தக்கதையை எழுதிக்கொண்டிருந்தபோது,பொதுவாக ஒருகதையில் ஒரு ஹீரோ,ஒரு வில்லன் இருக்கும்.ஆனால் வாழ்க்கையில் ஒவ்வொரு விசயத்துக்கும் ஒரு எதிர்திசை இருக்கும்.பகல் - இரவு,நிழல் - நிஜம், இன்பம் - துன்பம்.இந்த எல்லா பரிமாணங்களும் ஒரேகதைக்குள் வந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தில்தான் இந்தக்கதையை உருவாக்கினேன்.அதில்,நல்லவனாக செல்வராகவன் சார் அவர்களை தேர்ந்தெடுத்தேன்.வலுவான எதிர்மறைக் கதாபாத்திரமாக மைம்கோபி சார் அவர்களை தேர்ந்தெடுத்தேன்.இந்தக்கதையை சொன்னவுடன்,"உனக்காக எதுவாக இருந்தாலும் நான் செய்வேன்" என்று உடனே ஒப்புக்கொண்டார்.அந்த நம்பிக்கைக்கும் அன்பிற்கும் நான் மிகவும் நன்றி கூறுகிறேன்.அந்தகதாபாத்திரம் அவருக்கு ஒரு புதியஅனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன்.செல்வராகவன் சார் பற்றி சொல்லவேண்டும் என்றால்,அவரைப் பார்த்து இன்ஸ்பையர் ஆகி இயக்குநராக வர முயற்சி செய்தவர்களில் நானும் ஒருவன். அவரை நேரில் சந்திப்பதே ஒரு கனவாக இருந்தது.ஆனால் இன்று அவருடன் சேர்ந்து வேலைசெய்து,ஒரேமேடையில் உட்கார்ந்து பேசுவது எனக்கு கனவு நனவான மாதிரி உணர்ச்சி.இந்தப்படத்தின் மூலம் அவருடைய நம்பிக்கையைக் காப்பாற்றியிருக்கிறேன் என்று நம்புகிறேன்.
ஒரு சிறிய அனுபவத்தை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.ஒரு முக்கியமான சீன் நாங்கள் இரவுநேரத்தில் பெரியசெட்டப்பில் படமாக்கிக் கொண்டிருந்தோம்.நேரம் கடந்து குளிரும் அதிகமாகி,சார் உடல்நலமும் சற்று பாதிக்கப்பட்டிருந்தது.ஒருகட்டத்தில் ஷூட்டிங்கை நிறுத்தவேண்டிய நிலை வந்தது.ஆனால் அந்த சீன் கெடக்கூடாது,தயாரிப்பாளருக்கும் பாதிப்பு வரக்கூடாது என்று நினைத்தார்.சிறிதுதூரம் நடந்து சென்றபிறகு,திரும்பிவந்து "இந்தசீனை முடித்துவிட்டுப் போகலாம்" என்று சொன்னார்.அப்படியே அந்த சீனை முடித்துக்கொடுத்தார்.அந்ததருணம் எனக்கு மிகவும் பெரியபாடமாகவும்,ஒரு இயக்குநராக இருக்கவேண்டிய அர்ப்பணிப்பு என்ன என்பதை உணர்த்திய அனுபவமாகவும் இருந்தது.
இந்தப்படத்தில் நடித்த குஷி மேம்,இந்தக்கதையைக் கேட்டவுடன் ஒப்புக்கொண்டார்.இது ஒரு கணவன்-மனைவி உறவின் பின்னணியில் உள்ள அழகான காதல்கதையைப் பேசுகிறது.திருமணத்திற்கு பிறகும் காதல் இருக்கிறது என்பதை இந்தப்படம் காட்டும்.
கௌசல்யா மேம்,ஒய்.ஜி.மகேந்திரன் சார் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களின் அனுபவத்தால் இந்தப்படத்திற்கு பெரிய வலுச் சேர்த்திருக்கிறார்கள்.அனைவருக்கும் என் நன்றி.இந்தப்படத்தை நம்பி வெளியிட முன்வந்த சக்திவேலன் சார்,அவர் எனக்கு தயாரிப்பாளர் மட்டுமல்ல,ஒரு அண்ணன் மாதிரி.இந்தப்படத்தைப் பார்த்தவுடன் என்னை நம்பி முன்னேற்றியதற்கு மிக்கநன்றி சார்.
நான் சினிமாவிற்காக நிறைய நேரம்,உழைப்பு,வாழ்க்கையின் பலவிசயங்களைக் கொடுத்திருக்கிறேன்.அதற்குப்பதிலாக சினிமா எனக்கு அளித்த மிகப்பெரிய வாய்ப்பாக இந்தப்படத்தைப் பார்க்கிறேன்.இந்தப்படம் எனக்கு இன்னும் அதிகம் கொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இந்தப்படத்தை வரும் ஏப்ரல் 10ஆம் தேதி உங்கள்முன் கொண்டு வருகிறோம்.நீங்கள் அனைவரும் திரையரங்குகளில் வந்து பார்த்து ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன்.மிகவிரைவில் இந்தப்படத்தின் வெற்றிவிழாவில்,ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.இந்தக்கதையை நம்பி தயாரித்த விஜயாமேம் மற்றும் சதீஷ்சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி என்றார்.
இசையமைப்பாளர் ஏ.கே.பிரியன் பேசுகையில்…..
இந்தமாதிரி ஒரு மேடையில் நிற்கவேண்டும் என்பது எனக்கு நீண்டநாள் ஆசை.அந்த உணர்வை பகிர்ந்து கொள்ளவே இன்று இங்கே நிற்கிறேன்.நான் 10ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலத்தில்,பள்ளியில் இருந்து அடிக்கடி என் பெற்றோரிடம் ஒருகுறை கூறப்பட்டு வந்தது - "உங்கள் மகன் எப்போதும் இசை,நடனம்,கலாச்சார நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறார்.இப்போது போர்டு தேர்வு காலம்,இனிமேல் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும்" என்று.பொதுவாக,பல பெற்றோர் அந்தச்சூழலில் படிப்பையே முதன்மையாகக் கொள்ளச் சொல்வார்கள்.ஆனால்,என் பெற்றோர் முற்றிலும் மாறுபட்டவர்கள்."உனக்கு இசை பிடித்திருந்தால்,அதில் முழுமையாக ஈடுபடு.நாங்கள் உனக்கு ஆதரவாக இருப்போம்" என்று ஊக்கமளித்தார்கள்.அவர்களின் அந்த நம்பிக்கையும் ஆதரவும்தான் இன்று என்னை இந்தமேடையில் நிற்கவைத்துள்ளது.அதற்காக என் பெற்றோருக்கு நான் எப்போதும் நன்றி கூறிக்கொண்டே இருப்பேன்.
அடுத்து, என்னுடைய பயணத்தில் முக்கிய பங்காற்றிய என் அணியினருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.லிரிசிஸ்ட் விக்னேஷ் ராமகிருஷ்ணா - என் மிகவும் நெருக்கமான தோழரும்,என் இசைப்பயணத்தின் முக்கிய அங்கமாகவும் இருக்கிறார்.
மேலும், என் சிறுவயது நண்பர் லிரிசிஸ்ட் மூவி - நாங்கள் இருவரும் சிறுவயதிலிருந்தே இணைந்து வளர்ந்து,சினிமாவில் ஒன்றாக சாதிக்கவேண்டும் என்ற கனவுடன் வந்தோம்.அவருக்கும் என் மனமார்ந்த நன்றி.என்னுடன் இணைந்து பணியாற்றிய பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் - அரவிந்த் கார்னேஷ், எஸ்.பி.மலையண்ணா,பத்மஜா உள்ளிட்ட அனைவரும் இந்தப்படத்தின் இசைக்கு சிறப்பான பங்களிப்பு செய்துள்ளனர்.
இதேபோல், இண்டிபெண்டெண்ட் ஆர்டிஸ்டான ஆடி கிரிஸ் அவர்களையும் குறிப்பிடவேண்டும்.பலபாடல்களை உருவாக்கியுள்ள திறமையான இசைக்கலைஞர்.இனி வரவிருக்கும் என் படைப்புகளில் அவருடன் இணைந்து இசை இரட்டையராகப் பணியாற்ற இருக்கிறோம்.மேலும்,இந்தவாய்ப்பை உருவாக்கியவர் என் அண்ணன் சித்துகுமார்.இன்றைய போட்டி நிறைந்த சூழலில்,ஒருவருக்குக் கிடைத்த வாய்ப்பை மற்றொருவருக்காக விட்டுக்கொடுப்பது அரிதான ஒன்று.அந்தஅளவுக்கு பெரியமனதுடன் இந்தவாய்ப்பை எனக்கு வழங்கிய அவருக்கு என் மனமார்ந்த நன்றி.அவரிடமிருந்து எதிர்காலத்தில் பெரிய வெற்றிகளை நீங்கள் கண்டிப்பாக காண்பீர்கள்.
சிறுவயதிலிருந்தே சில இயக்குநர்கள் மீது ஒரு தனிஈர்ப்பு இருக்கும்.எனக்கு அப்படிப்பட்டவர்களில் ஒருவர் செல்வராகவன் சார். அவரை ஒரு ரோல்மாடலாகக் கொண்டு வளர்ந்த நான்,இன்று அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது.மேலும்,என் திறமையில் நம்பிக்கை வைத்து இந்தவாய்ப்பை அளித்த இயக்குநர் டென்னிஸ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மைகம்கோபி பேசுகையில்…..
அந்த பாராட்டு உண்மையிலேயே மிகவும் அழகானது.எதைப் பாராட்டவேண்டும் என்ற கட்டாயம் இல்லாவிட்டாலும்,மனதாரப்பாராட்டி மற்றவர்களை மகிழ்விப்பது மிகப்பெரிய விசயம்.அந்தமகிழ்ச்சிதான் எங்களுக்கு முக்கியம்.
இன்றைய சூழலில்,நேருக்குநேர் நல்லதைச் சொல்லும் மனிதர்கள் குறைந்து வருகிறார்கள்.பலர் பின்னால் பேசுவதில் பழகியிருக்கிறோம்.ஆனால்,முகத்துக்கு நேராக உண்மையான பாராட்டை வழங்குவது ஒரு அரியகுணம்.அப்படிப்பட்ட சிறந்தமனிதர்களுடன் இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு ஒரு பெருமையும், ஒரு ஆசீர்வாதமும் ஆகும்.இந்தநேரம் அனைவருக்கும் பசியான நேரம் என்பதால்,சுருக்கமாக நன்றிசொல்ல விரும்புகிறேன்."நன்றி" என்பது மிகவும் அழகான வார்த்தை.அதேபோல், பாராட்டுவது மிகவும் அவசியமான ஒன்று.பாராட்டுகள் இல்லாமல் இருந்தால்,நாம் செய்கிற முயற்சிகளுக்கு அர்த்தமே இருக்காது.ஒரு கைதட்டல்கூட ஒரு கலைஞனுக்கு மிகப்பெரிய உற்சாகத்தைத்தரும்.அது மனதை இலகுவாக்கும்,மேலும் சிறப்பாகச் செயல்படத்தூண்டும்.
நாம் "நல்லா பண்ணிருக்கீங்க", "சூப்பரா இருக்கிறது" என்று சொல்வது,அந்தவார்த்தையை உண்மையாக்க கலைஞர்களை மேலும் முயற்சி செய்யவைக்கும்.அந்தமுயற்சிக்கான மிகப்பெரிய ஊக்கம் பாராட்டுதான்.அதனால்,இந்த அன்பும் ஆதரவும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.தயாரிப்பாளர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.தனஞ்செயன் சார் அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.அவரின் ஊக்கமும் நம்பிக்கையும் எனக்கு ஒரு முக்கியமான தருணத்தில் பெரியஆதரவாக இருந்தது.அதற்காக அவருக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதேபோல்,கதிரேசன் சார்,எப்போதும் சிரிப்புடன்,அமைதியாக,எதையும் சமாளிக்கும் அவருடைய மனநிலை மிகவும் பாராட்டத்தக்கது. அந்தபொறுமையும் அணுகுமுறையும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
இசையமைப்பாளர் ஏ.கே.பிரியன் மிகவும் நேர்மையான,திறமையான இளைஞர்.அவரின் பேச்சிலேயே அவருடைய உண்மைத்தன்மை தெரிகிறது.நல்லஅணியுடன் இணைந்து பணியாற்றுகிறார்.அந்த அர்ப்பணிப்பும் உண்மையும் அவரை மிகப்பெரிய உயரத்திற்குக் கொண்டுசெல்லும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.
ஒளிப்பதிவாளர் ரவிவர்மா,அவருடைய காட்சிகள் எப்போதும் தனித்துவம் வாய்ந்தவை.மிகவும் எளிமையாக அணுகினாலும், காட்சிகளை அழகாக வடிவமைக்கும் திறமை அவருக்கு உள்ளது.அதற்காக அவருக்கு பாராட்டுகள்.ஸ்டண்ட் மாஸ்டர்,எடிட்டர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்.ஒவ்வொருவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். குறிப்பாக,தொழில்நுட்ப அணியினர் எப்போதும் தீவிரமாகவும்,சினிமாவையே மையமாகக் கொண்டு செயல்படுவது மிகவும் பாராட்டத்தக்கது.
இந்தப்படத்தை வெளியிடும் சக்தி சார் அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துகள்.ஒரு நல்லபடத்தை மக்களிடம் கொண்டுசேர்ப்பதில் வெளியீட்டாளரின் பங்கு மிகமுக்கியமானது.அவர் இணைந்துள்ளதால்,இந்தப்படம் தரமானபடைப்பு என்பதில் நம்பிக்கை அதிகரிக்கிறது. தயாரிப்பாளர் விஜயாசதீஷ் அவர்களுக்கும் வாழ்த்துகள்.மிகவும் நம்பிக்கையுடன் பேசினார்.குடும்பமாக இணைந்து இந்தப்படத்தை வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இயக்குநர் டென்னிஸ் முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது.செல்வராகவன் சார் மீது எனக்கு உள்ள மரியாதையும்,நேசமும் மிகவும் அதிகம்.அவர் ஒரு சிறந்தகலைஞர் மட்டுமல்ல,மிகவும் இயல்பான மனிதரும் ஆவார்.உண்மையை நேராகச் சொல்லும் குணம் அவருடைய தனிச்சிறப்பு.அவருடன் இணைந்து பணியாற்றுவது ஒரு பெரும்அனுபவமாகும்.
குஷி,கௌசல்யா உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.குறிப்பாக,குஷி தமிழில் மிகவும் அழகாகப்பேசுகிறார், அவருக்கு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது.கௌசல்யா மேடம் அவர்களின் இனிமையான நடிப்பும் இந்தப்படத்திற்கு கூடுதல்பலமாக உள்ளது.இந்தப்படத்தில் நான் நல்லமுறையில் தோன்றியிருந்தால்,அதற்கான முழுபுகழும் இயக்குநருக்கே சேரும்.ஏதேனும் குறை இருந்தால்அது எனது பொறுப்பு.மொத்தத்தில்,இந்தஉலகில் அனைத்தும் நம் பார்வைக்கேற்ப அழகாகத்தெரியும்.அந்த அழகான பார்வையை கொடுத்த அனைவருக்கும் என் நன்றிகள்.அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.தயவுசெய்து அனைவரும் திரையரங்குகளில் சென்று இந்தப்படத்தைப் பார்த்து ஆதரிக்கவும்.நன்றி
இவ்வாறு அவர் பேசினார்.

