நமித் மல்கோத்ரா தயாரிப்பில் நித்திஷ் திவாரி இயக்கிய ராமாயணா திரைப்படத்தில் ராமராக ரன்பீர் கபூர் நடித்துள்ளார்.
சீதையாக சாய் பல்லவியும் ராவணனாக யஷ்ஷும் நடித்துள்ளனர். கடந்த நவம்பர் 5ம் தேதி வெளியான ராமாயணா திரைப்படம் இதுவரை உலகளவில் 960 கோடி ரூபாய் வசூலை ஈட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராமாயணா திரைப்படம் இன்று இரவுக்குள் அதிரடியாக 1000 கோடி வசூலை கடக்கும் என்கின்றனர். பாலிவுட்டில் வெளியான துரந்தர் 2 படம் 1800 கோடி வசூலை ஈட்டிய நிலையில், அந்த படத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு பாலிவுட் படம் இந்த ஆண்டு 1000 கோடி வசூலை ஈட்ட உள்ளது.
ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படத்தின் 800 கோடி வசூலை கடந்து மீண்டும் பாலிவுட் தான் கெத்து என்பதை ராமாயணா நிரூபித்துள்ளது. என்ன இருந்தாலும் 2000 கோடி பட்ஜெட்டில் உருவான படத்துக்கு இந்த வசூல் ரொம்ப குறைவு தான் எனக் கூறுகின்றனர். இதே வேகத்தில் வசூல் சென்றால் கண்டிப்பாக 2000 கோடி வசூலையும் நெருங்கும் என்கின்றனர்.

