Tuesday, 11 Aug, 11.26 am Cine Reporters

செய்திகள்
அக்தரை ஆபாசப் பட நடிகர் போல இருக்கிறாய் என சொன்ன ஆஸ்திரேலிய வீரர்! 18 வருடங்களுக்கு முன்னர் நடந்த ஸ்லெட்ஜிங்

ஆஸ்திரேலியா முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மேத்யு ஹைடன் தனக்கும் அக்தருக்கும் இடையே 2002 ஆம் ஆண்டு நடந்த வார்த்தை மோதல் குறித்து பேசியுள்ளார்.

2002 ஆம் ஆண்டு அமீரகத்தில் நடந்த டெஸ்ட் போட்டி தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அப்போது அக்தருக்கும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனான ஹைடனுக்கும் இடையே நடந்த சண்டை பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபற்றி இப்போது ஹைடன் தெரிவித்துள்ளார். போட்டியின் போது அக்தர் என்னைப் பார்த்து ' உன்னை கொல்லப் போகிறேன்' என தெரிவித்தார்.

அதற்கு பதிலாக அவரை கோபப்படுத்த நான் 'நீங்கள் ஒரு இரண்டாம் தர பி கிரேட் நடிகர் போல இருக்கிறீர்கள்' எனக் கூறினேன். இந்த வார்த்தை அவரை மேலும் கோபமாக்கியது. அதனால் அந்த போட்டி முழுவதும் பந்து வீச வரும் போதெல்லாம், என்னைத் திட்ட ஆரம்பித்தார். அதனால் நான் அவர் பந்துவீச வரும்போதெல்லாம் விலகினேன்.

இது பற்றி நடுவர் என்ன பிரச்சனை என என்னிடம் கேட்டார். அதற்கு நான் 'விதிமுறைகளை மீறி அவர் (அக்தர்) என்னை திட்டுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது' எனக் கூறினேன்.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Cinereporters
Top