Tuesday, 11 Aug, 11.34 am Cine Reporters

செய்திகள்
அமேசான் ப்ரைம் தளத்தில் இருந்து காணாமல் போன சூர்யா படம் - பின்னணி என்ன?

அமேசா ப்ரைம் தளத்தில் சமீபத்தில் ரிலீஸான சூர்யா நடித்த 24 படம் தற்போது நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

2016 ஆம் ஆண்டு வெளியான 24 படம் காலப் பயணம் பற்றியது . இந்த படத்தில் சூர்யாவோடு நித்யா மேனன், சமந்தா மற்றும் சரண்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்களை ஏமாற்றியது. அதுபோல விமர்சன ரீதியாகவும் மிகவும் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றது.

இந்நிலையில் லாக்டவுன் சமயத்தில அந்த படம் அமேசான் ப்ரைம் தளத்தில் சமீபத்தில் வெளியானது. ஆனால் திடீரென ஏனோ இப்போது அதில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதுபற்றி விசாரித்ததில் படத்தை அமேசான் பிரைம் தளத்தில் பார்த்த ரசிகர்கள் ஒலிப் பிரச்சனைகள் இருப்பதாக புகார் வைத்துள்ளன. மேலும் 24 என பெயர் இருப்பதால் தேடிக் கண்டுபிடிப்பதில் சிக்கல் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பிரச்சனைகள் சரி செய்த பின்னர் மீண்டும் அப்லோட் செய்யப்படும் என சொல்லப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Cinereporters
Top