Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அரசனுக்கு மட்டுமில்ல!.. கமலுக்கும் அல்வா கொடுத்த அனிருத்!.. சண்டியர் பட்ட பாடு!...

அரசனுக்கு மட்டுமில்ல!.. கமலுக்கும் அல்வா கொடுத்த அனிருத்!.. சண்டியர் பட்ட பாடு!...

Cine Reporters 15 hrs ago

துவக்கத்தில் தனுஷ் நடித்த மற்றும் தயாரித்த படங்களுக்கு இசையமைத்தவர் அனிருத். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய உறவினர் இவர்.

படிப்படியாக முன்னேறி விஜய் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த படங்களில் பாடல்கள் ஹிட் அடிக்கவே அஜித், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரின் படங்களுக்கும் இசையமைக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் ரஜினி, கமல் படங்களுக்கும் அனிருத் இசையமைத்தார்..

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அரசன் படத்திற்கு அனிருத்தான் இசை. ஆனால் கடந்த தீபாவளியன்று வெளியான அரசன் க்ளிப்ஸ் வீடியோவிற்கு அனிருத் இசையமைக்கவில்லை. அனிருத்தின் திருமணம் நவம்பர் 11ம் தேதி நடைபெறவிருந்ததால் அந்த வீடியோவுக்கு அனிருத் இசையமைக்கவில்லை. அக்டோபர் மாதம் முதலே அனிருத் எந்த படத்திற்கும் இசை அமைக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் அப்செட்டான வெற்றிமாறன் அரசன் படத்திலிருந்து அனிருத்தை தூக்கி விட்டதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது...

ஒருபக்கம் அருண்குமார் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள சண்டியர் படத்திற்கும் அனிருத்தான் இசை. சில நாட்களுக்கு முன்பு போஸ்டர்களும் வெளியானது. ஒரு வீடியோவைத்தான் வெளியிட திட்டமிட்டு அதற்கான வேலைகளும் நடந்தது. ஆனால் திருமண வேலையில் அனிருத் பிஸியாக இருப்பதால் ஒரு போஸ்டரை மட்டும் வெளியிட்டிருக்கிறார்கள்.

சண்டியர் படத்தின் படப்பிடிப்பு விரைவில் மதுரையில் துவங்குகிறது. படப்பிடிப்பு துவங்கும் நாளில் அனிருத் இசையோடு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என்கிறார்கள்.. அதாவது அனிருத்துக்காக கமலும் காத்திருக்கிறார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cinereporters