பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர், இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் காதல் உறவில் இருப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வந்த தகவல்களுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சமீபத்தில் மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள ஒரு கஃபேவில் மிருணாள் தாகூர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் காணப்பட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அந்த வீடியோவில் மிருணாள் கஃபேவில் இருப்பதும், சில நேரத்திற்குப் பிறகு யஷஸ்வி அங்கிருந்து வெளியேறுவதும் இடம்பெற்றிருந்ததாக வெளியாகின. இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலரும் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக கிளப்பி விட்டன்ர். இது இணையத்தில் காட்டு தீ போல பரவியது.
இந்த நிலையில் மிருணாள் தாகூர் தற்போது அதற்கு நேரடியாக பதிலளித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ,ப்ரோ, கொஞ்சம் ரிலாக்ஸ். நாங்கள் இருவரும் ஒன்றாக இருப்பதை எங்கே பார்த்தீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், படித்தவர்களே இதுபோன்ற வதந்திகளை நம்புவது தனக்கு ஆச்சரியமாக இருப்பதாகவும், நாட்டில் விவாதிக்க வேண்டிய பல முக்கியமான பிரச்சனைகள் இருக்கும்போது அவற்றை பற்றி கவனம் செலுத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

