Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Dark Box Office : 5 நாட்களில் அஜய் கார்த்தியின் 'டார்க்' செய்த வசூல் இவ்ளோ தானா?

Dark Box Office : 5 நாட்களில் அஜய் கார்த்தியின் 'டார்க்' செய்த வசூல் இவ்ளோ தானா?

Cine Reporters 3 days ago

5 நாட்களில் 'டார்க்' செய்த வசூல் தெரியவந்துள்ளது. பிரபல தயாரிப்பாளர் '5 ஸ்டார்' செந்திலின் மகன் அஜய் கார்த்தி கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படம் தான் 'டார்க்'.

கடந்த ஜூலை 3-ஆம் தேதி ரிலீஸான இந்த படத்தை கல்யாண்.கே.ஜெகன் இயக்கியுள்ளார். இதில் அஜய் கார்த்தியுடன் இணைந்து கே.பாக்யராஜ், அஞ்சனா நேத்ரன், நட்டி, VTV கணேஷ், சிபி சக்கரவர்த்தி, அரவிந்த், சாகுல், நரேன் நடித்துள்ளார்கள்.

இதனை '5 ஸ்டார்' செந்திலுடன் சேர்ந்து 'டாடா' இயக்குநர் கணேஷ்.கே.பாபுவின் 'MG ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது. மனு ரமேஷன் இசையமைத்துள்ள இதற்கு ரவி சக்தி ஒளிப்பதிவு செய்துள்ளார், கதிரேஷ் அழகேசன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

ஓரளவுக்கு நல்ல விமர்சனங்கள் வந்தும் சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லர் ஜானர் படமான இதன் வசூல் குறைவாக தான் இருக்கிறது. அதன்படி கடந்த 5 நாட்களில் உலக அளவில் ரூ.99 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளதாம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cinereporters