Dailyhunt
எனக்கு 2 வயதில் 4 குழந்தைகள். உங்க கற்பனை முடிஞ்சதா? - வதந்திக்கு மரண பங்கம் செய்த திரிஷா!

எனக்கு 2 வயதில் 4 குழந்தைகள். உங்க கற்பனை முடிஞ்சதா? - வதந்திக்கு மரண பங்கம் செய்த திரிஷா!

Cine Reporters 6 days ago

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் திரிஷாவும் ஒருவர். 1999ல் அறுமுகம் ஆன அவர் இன்றுவரை ஹீரோயினாக மட்டுமே நடித்து வருகிறார்.

ரஜினியை தவிர்த்து கமல், விஜய், அஜீத், விக்ரம் என அனைத்து முன்னணி நாயகர்களுடனும் ஜோடி போட்டுள்ளார். தற்போது சூர்யா நடிப்பில் கருப்பு, சிரஞ்சீவியுடன் ‘விஸ்வம்பரா ஆகிய படத்தில் நடித்து வருகிறார்.

சமீபகாலமாக திரிஷா சினிமாவிலிருந்து விலகுகிறார் என்றும், புதிய வாய்ப்புகளை வேண்டாம் என மறுக்கிறார் என்றும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. சமீபத்தில் திரை விமர்சகர் சித்ரா லட்சுமணன்கூட அதனது சேனலில் இது உண்மைதான் என்றும், சில தயாரிப்பாளர்கள் இதனை உறுதி படுத்தியுள்ளனர் என்றும் கூறினார். ஆனாலும் திரிஷா தரப்பிலிருந்து இதற்கு பதில் எதுவும் வராமல் இருந்தது.

இந்த நிலையில் இந்த வதந்திகளுக்கு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நகைச்சுவையாக ஒரு பதிலடி கொடுத்துள்ளார் த்ரிஷா. அதில் அவர், “நான் கேள்விப்பட்ட வரைக்கும் நான் சினிமாவில் இருந்து விலகி விட்டேன்.. ஒரு கோடீஸ்வர தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டேன்.. இரண்டு வயதில் எனக்கு நான்கு குழந்தைகள் உள்ளது, வேறு எதையாவது நான் இதில் சேர்க்க வேண்டுமா? அல்லது உங்களின் கற்பனை முடிந்து விட்டதா?” என்று மிகவும் நக்கலாகப் பதிவிட்டுள்ளார்.

திரிஷா வெளியிட்டுள்ள இந்த நக்கல் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cinereporters