Dailyhunt
ஜீவா - ஜித்தன் ரமேஷ் அப்பா.. பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி கார் விபத்தில் மரணம்

ஜீவா - ஜித்தன் ரமேஷ் அப்பா.. பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி கார் விபத்தில் மரணம்

Cine Reporters 5 days ago

பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், நடிகர் ஜீவா அவர்களின் தந்தையுமான ஆர்.பி. சவுத்ரி விபத்தில் சிக்கி காலமானார்.

தனது பூர்வீக ஊரான ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூருக்கு சென்றிருந்தபோதே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஜோத்பூர் பகுதியில் வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் அவர் கடுமையாக காயமடைந்தார். விபத்துக்குப் பிறகு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக தகவல்கள் வெளியானது. அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் தற்போது அவர் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஆர்.பி.சௌத்ரி முன்னணி இந்திய திரைப்படத் தயாராப்பாளராவார். இவர் சூப்பர் குட் பிலிம்ஸ் திரைப்பட தயாரிப்பு நிருவனத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் படங்களை தயாரித்துள்ளார். இவர் நாட்டாமை, கோகுலம், பூவே உனக்காக, சூர்ய வம்சம், திருப்பாச்சி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளார்.

திரைப்படத் துறையில் நீண்டகால அனுபவம், பல வெற்றிப் படங்கள் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றின் மூலம் ஆர்.பி. சௌத்ரி, தென்னிந்திய சினிமாவில் மதிப்பிற்குரிய நபராகத் திகழ்ந்து வந்தார்.

ஆர்.பி.சௌத்ரி மக்ஜபீன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு சுரேஷ், ஜீவன், ரமேஷ், அமர் என்ற நான்கு பிள்ளைகள் உண்டு. இதில் ரமேஷ் மற்றும் அமர் என்ற ஜீவா பல படங்களில் நடித்து திரையுலகில் பிரபலமானவர்கள்.

இந்நிலையில் தற்போது இந்த திடீர் விபத்து, திரைப்பட உலகில் பெரும் கவலையையும் அதிர்ச்சியும் ஆழ்த்தியுள்ளது. ஆர்.பி. சவுத்ரியின் மரணம் திரையுலகில் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cinereporters