Dailyhunt
kalidas 2 Review:  காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

Cine Reporters 2 weeks ago

ரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.

முதல் பாகம் போலவே க்ரைம் மற்றும் சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்ததா என்பதை இங்கே பார்ப்போம்.

தனது கடந்த கால கசப்பான நிகழ்வுகளின் அழுத்தத்திலிருந்து இன்னும் முழுமையாக வெளிவராத போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் (பரத்) ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் ஒரு சிறுமியின் உடல் கண்டெடுக்கப்படுகிறது. இந்த மர்மமான கொலையை விசாரிக்கத் தொடங்குகிறார் .அஜய் கார்த்தி தான் குற்றவாளி என்று நிரூபிக்க பவானி ஸ்ரீ போராடிகொண்டிருக்கும் நிலையில் அதே அடுக்குமாடி குடியிருப்பில் மேலும் ஒரு சிறுமி மர்மமான முறையில் உயிரிழக்கிறார். இதனால், குடியிருப்பு வாசிகளிடத்தில் பயம் அதிகரிக்கிறது. இந்த மர்ம மரணங்களின் பின்னணி என்ன ?, இதற்கு பின்னணியில் இருக்கும் உண்மையான குற்றவாளி யார் ? சவாலான இந்த வழக்கில் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து காளிதாஸ் குற்றவாளியை எப்படி நெருங்குகிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.

சூப்பர் ஹீரோ பில்டப்கள் இல்லாமல், தொடர் மன அழுத்தங்களை எதிர்கொள்ளும் ஒரு யதார்த்தமான போலீஸ் அதிகாரியாக பரத் தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தோல்விகளைத் தாண்டி உண்மையை நோக்கி நகரும் அவரது நிதானமான உடல்மொழி படத்திற்கு மிகப்பெரிய பலம். நிச்சயம் பரத்திற்கு இந்த படம் நல ரீ எண்ட்ரீயாகவே அமைந்துள்ளது.

ஒரு பக்கா த்ரில்லர் படத்திற்குத் தேவையான விறுவிறுப்பை முதல் பாதி முழுவதும் தக்க வைத்துள்ளார் இயக்குநர் ஸ்ரீ செந்தில் தேவையற்ற பாடல்களோ, திணிப்புகளோ இல்லாமல் நேரடியாக கதைக்குச் சென்றிருப்பது சிறப்பு. இரண்டாம் பாதியில் இருக்கும் விறுவிறூப்பு முதல் பாதியிலும் இருந்திருந்தால் நிச்சயம் படம்ன் இன்னும்பெரிய வெற்றியை பெற்றிருக்கும். ஆனாலும் கிளைமாக்ஸ் யாரும் எளிதில் யூகிக்க முடியாத வகையில் இருப்பது

சாம் சி.எஸ்-ன் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது. அறிமுக நடிகர் அஜய் கார்த்தி தனது பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளார். பவானி ஸ்ரீயின் நடிப்பு கதையின் தீவிரத்தைக் கூட்டுகிறது. பிரகாஷ் ராஜ் மற்றும் கிஷோர் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கேமியோ வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பூவே உனக்காக சங்கீதா இபடத்தில் நடித்துள்ளார். அவரது பாத்திரமும் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது ‘காளிதாஸ் 2’ முதல் பாகம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை எந்த இடத்திலும் சிதைக்காமல், ரசிகர்களை சீட் நுனியில் அமர வைக்கும் சுவாரஸ்யமான படமாக இது உள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cinereporters