கமல் நடித்த சத்யா படத்தின் போட்டா படியுது பாடலை மீண்டும் அதே போல உருவாக்கியுள்ளார் இயக்குனர் சிம்பா அரவிந்த்.
நடிகர் கமல்ஹாசன் மற்றும் அமலா நடிப்பில் கடந்த 1988 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சத்யா மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தில் கமலஹாசன் ஆங்கி யங்மேனாக நடித்து அந்த காலத்து வேலையில்லாத இளைஞர்களின் மனோ நிலையை பிரதிபலித்தார். அந்த படத்தில் இடம்பெற்றுள்ள போட்டா படியுது பாடல் அவர் கதாபாத்திரத்தை காட்டும் விதமாக அமைக்கப்பட்டு இருக்கும்.
இந்நிலையில் சிம்பா என்ற படத்தின் இயக்குனர் அரவிந்த் வேறு நடிகர்களை வைத்து ஏறக்குறைய அதே போன்ற இடங்களில் மீண்டும் படமாக்கி இருந்தார்.
லோகேஷ்க்குப் பதிலளித்த கமல் 'நிபந்தனையில்லாத இந்த அன்புக்கு நானும் நிபந்தனையில்லாத அன்பையே அளிக்க முடியும்' என நெகிழ்ந்து கூறியுள்ளார்.

