Dailyhunt
லெஜண்ட் சரவணாவின் 'லீடர்' ஓடிடி ரிலீஸ் எப்போ?.. வெளியான சூடான தகவல்!..

லெஜண்ட் சரவணாவின் 'லீடர்' ஓடிடி ரிலீஸ் எப்போ?.. வெளியான சூடான தகவல்!..

Cine Reporters 1 week ago

தொழிலதிபராக இருந்து நடிகராக மாறிய லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவான புதிய திரைப்படம் 'லீடர்' சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

இந்த படம், அவரின் இரண்டாவது முக்கியமான திரைப்படமாகும். இந்நிலையில், லீடர் திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், ஓடிடியில் வெளியாகவில்லை. மேலும், லீடர் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

எதிர்நீச்சல், கொடி, பட்டாஸ், காக்கி சட்டை, கருடன் படங்களை இயக்கிய ஆர்,எஸ். துரை செந்தில்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். 2024-ல் தொடங்கிய படப்பிடிப்பு 2025-ல் நிறைவடைந்தது. தூத்துக்குடி, சென்னை, ஊட்டி, ஜார்ஜியா போன்ற பல இடங்களில் படமாக்கப்பட்டது. 2026 ஏப்ரல் 3-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான இந்த படம், ஆக்ஷன் மற்றும் திரில்லர் வகையாக இருந்தது.

இந்த படத்தில் சரவணன் "சக்திவேல்" என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ஆண்ட்ரியா, ஷாம், ஐஸ்வர்யா, பாயல் ராஜ்புத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதைப்படி, சாதாரண மனிதராக இருக்கும் நாயகன் குற்றக் குழுக்கள் மற்றும் சட்ட அமலாக்கத்திற்கிடையில் சிக்கி, தனது குடும்பத்தை பாதுகாக்க போராட வேண்டிய சூழ்நிலையில் மாட்டிக்கொள்வது போல கதை செல்கிறது.

சமூக வலைத்தளங்களில் படம் கலவையான விமர்சனங்களை பெற்று ஆக்ஷன் காட்சிகள் மற்றும் இரண்டாம் பாதி பாராட்டப்பட்டுள்ளது. பாக்ஸ் ஆபிஸில் ஆரம்பத்தில் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், ரசிகர்கள் மத்தியில் ஒரு அளவுக்கு வரவேற்பைப் பெற்றுள்ளது.

'லீடர்' திரைப்படம் மூலம், தனது முதல் படம் தி லெஜண்டுக்கு பின், நடிகராக தன்னை நிலைநிறுத்த முயற்சி செய்துள்ளார் லெஜண்ட் சரவணன். இந்த படம் முழுமையான வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், ஒரு கமர்ஷியல் எண்டர்டெயின்மண்டாக ரசிகர்களிடம் பேசுபொருளாக உள்ளது.

மேலும், லீடர் திரைப்படம் மே 1ம் தேதி ப்ரைம் விடியோ ஒடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் வெளியாகி 4 வாரங்கள் ஆன பின்னரும் ஓடிடியில் வெளியாகவில்லை. வரும் மே 15ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் லீடர் வெளியாகும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cinereporters