Tuesday, 11 Aug, 12.59 pm Cine Reporters

தற்போதைய செய்திகள்
மீரா மிதுனின் தரம் தாழ்ந்த விமர்சனம் குறித்து நடிகர் சூர்யா டுவிட்!

அதை அடுத்து அவர்கள் மீரா மிதுனை சமூகவலைதளங்களில் ஆபாசமாக திட்ட ஆரம்பித்தனர். ஆனால் அப்படி ஆபாசமாக திட்டியவர்களில் பலர் சூர்யா ரசிகர்கள் இல்லை என சொல்லப்படுகிறது. ஆனாலும், தன்னை திட்டியவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள மீரா மிதுன் 'இனிமேல் என்னை யாராவது ஆபாசமாக திட்டினால் , நானும் சூர்யாவின் மனைவி ஜோதிகாவையும், விஜய்யின் மனைவி சங்கீதாவை என்னை சொல்லி திட்டும் அதே வார்த்தையில் திட்டுவேன் எனக் கூறி வீடியோ வெளியிட்டார்.

இந்த விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமான சர்ச்சை கிளப்பிய நிலையில் நேற்று இது குறித்து இயக்குனர் பாரதிராஜா, "மீரா மிதுன் எல்லா மீறி நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா குறித்து அவதூறு பேசி வருவதை கண்டித்தும். மீராவை மோசமான ஆபாச வார்த்தைகளால் திட்டும் தங்களுடைய ரசிகர்களை கண்டிக்காத விஜய் , சூர்யா குறித்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் .

இந்நிலையில் தற்ப்போது நடிகர் சூர்யா ட்விட் செய்துள்ளார். அதில், தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற. "எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்.." என பதிவிட்டுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Cinereporters
Top