Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நாலு பாட்டுக்கு ஆடுனா ஜட்ஜா? -ரியாலிட்டி ஷோக்களை வெளுத்து வாங்கிய வனிதா

நாலு பாட்டுக்கு ஆடுனா ஜட்ஜா? -ரியாலிட்டி ஷோக்களை வெளுத்து வாங்கிய வனிதா

Cine Reporters 0 months ago

மிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் அதில் நடுவர்களாகப் பங்கேற்பவர்கள் குறித்து நடிகை வனிதா விஜயகுமார் கூறிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மாணிக்கம் படம் மூலம் அறிமுகம் ஆனவர் வனிதா விஜயகுமார். தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்த படங்கள் இவருக்கு பெரிதாக கை கொடுக்காததால் திரையுலகில் அவரால் ஜொலிக்க முடியவில்லை. அவ்வபோது சில படங்களில் நடித்து வருகிறார் அவர்.

இந்த நிலையில் சின்னதிரை நடுவர்கள் குறித்து வனிதா கூறிய கருத்து பேசுபொருளாகியுள்ளது.

இப்போது இருக்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் சம்பந்தமே இல்லாதவர்கள் நடுவர்களாக இருக்கிறார்கள். இது எனக்குப் புரியவே இல்லை. ஒரு பாட்டுப் போட்டி என்றால் அதில் அனுபவம் வாய்ந்த பாடகர்களைத்தான் நடுவர்களாக அழைக்க வேண்டும். அப்போதுதான் போட்டியாளர்களுக்குச் சரியான ஆலோசனைகளை வழங்க முடியும்.

இதேபோல் நடனப் போட்டி என்றால் அதில் ஒரு டான்ஸ் மாஸ்டரையோ அல்லது நடிகை ஷோபனா போன்ற அந்தத் துறையில் பெரிய அளவில் சாதித்தவர்களையோ நடுவராகப் போட வேண்டும். அதை விட்டுவிட்டு, ஏதோ நான்கு படங்களில் நடனம் ஆடிய சினிமாக்காரர்களைக் கொண்டு வந்து நடுவராக உட்கார வைக்கிறார்கள். இந்த கான்செப்ட் எதற்கு என்றே எனக்குப் புரியவில்லை என வனிதாதெரிவித்துள்ளார்.

வனிதாவின் இந்த வெளிப்படையான பேச்சுக்குச் சமூக வலைதளங்களில் வனிதா சொல்வதில் நியாயம் இருக்கிறது, டிஆர்பி-க்காகப் பிரபலமானவர்களைப் போடுவதை விட, தகுதியானவர்களைப் போட வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cinereporters