Dailyhunt
நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் - எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் - எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

Cine Reporters 2 weeks ago

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல் வெற்றி கொடுத்துள்ள பிரதீப்பிற்கு இப்படமும் வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளரும் இயக்குனருமான சீமான் நடித்துள்ளார்.

இந்த நிலையில் எல்ஐகே படப்பிடிப்பு தளத்தில் நடந்த சில சம்பவங்களை நடிகை கீர்த்தி ஷெட்டி பகிர்ந்தார், குறிப்பாக சீமானுடனான நட்பு குறீத்து பேசியுள்ளா. ஆவ்ர் கூறியபோது, எல்ஐகே படப்பிடிப்பில் சீமான் சாரை சந்தித்த பிறகுதான் எனது தமிழ் மேம்பட்டது. அவருடன் நான் பேசும் ஒவ்வொரு முறையும், ஆங்கில வார்த்தைகளுக்குப் பதிலாக சரியான தமிழ் சொற்களையே பயன்படுத்த வேண்டும் என்று அவர் மிகவும் துல்லியமாக வலியுறுத்துவார். சீமான் சாருடன் தொடர்ந்து பேசும்போதுதான் தமிழ் மொழியின் முக்கியத்துவமும், அதன் உண்மையான மதிப்பும் எனக்குத் தெளிவாகப் புரிந்தது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

எல்ஐகே 2040-ஆம் ஆண்டின் எதிர்காலப் பின்னணியில் ஒரு சயின்ஸ் பிக்‌ஷன்ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் (எஸ்.எஸ். லலித் குமார்) மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cinereporters