Dailyhunt
ரத்னகுமாரின் '29' படத்தின் டிரைலர் வந்துடுச்சு.. ரெட்ரோ முரட்டு வில்லனா இதுல ஹீரோ!..

ரத்னகுமாரின் '29' படத்தின் டிரைலர் வந்துடுச்சு.. ரெட்ரோ முரட்டு வில்லனா இதுல ஹீரோ!..

Cine Reporters 1 week ago

சூர்யாவின் ரெட்ரோ படத்தில் வில்லனாக நடித்த நடிகர் விது ஹீரோவாக நடிக்க 29 படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ரத்னகுமார்.

மேயாத மான் படத்தின் மூலம் டைரக்டராக கோலிவுட்டில் அறிமுகமான ரத்னகுமார் அமலா பாலை வைத்து ஆடை படத்தை இயக்கினார்.

ஆடை படத்தில் அம்மணமாக அமலா பால் நடித்ததை பார்த்து ஒட்டுமொத்த கோலிவுட்டும் அதிர்ச்சியில் உறைந்து போனது. அமலா பால் விவாகரத்து செய்து பிரியவே இந்த படம் தான் காரணம் என்றும் கூறப்பட்டன.

அந்த படத்திற்கு பிறகு ரத்னகுமாருக்கு அடுத்த படத்தை இயக்க பல வருடங்கள் ஆகின. சந்தானத்தை வைத்து கடைசியாக இயக்கிய குலு குலு படமும் ஃப்ளாப் ஆனது.

லோகேஷ் கனகராஜின் நண்பரான ரத்னகுமார் விஜய்யின் மாஸ்டர் மற்றும் லியோ உள்ளிட்ட படங்களில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றினார்.

இந்நிலையில், ரெட்ரோ பட வில்லன் விது, ப்ரீத்தி அஸ்ரானி, மாஸ்டர் மகேந்திரனை வைத்து அவர் இயக்கியுள்ள 29 படம் வரும் மே 8ம் தேதி நாளை மறுநாள் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியானது.

காதல் மற்றும் காதல் தோல்வி, சினிமா ஷூட்டிங் என டிரைலர் ரொம்பவே வித்தியாசமாக உள்ளது. மேயாத மான் படத்துக்குப் பிறகு மீண்டும் லவ் டிராக்கில் ரத்னகுமார் படம் பண்ணியுள்ள நிலையில், இந்த படமாவது அவருக்கு ஹிட் கொடுக்குமா என்பது மே 8ம் தேதி படம் வெளியானதும் தெரிந்து விடும்.

தமிழ் சினிமா ரசிகர்கள் இன்னமும் விஜய் முதலமைச்சர் ஆகவில்லையே என்கிற கவலையில் இருந்து வரும் நிலையில், கர படம் போல இந்த படமும் கண்டுக்கொள்ளாமல் போய்விடக் கூடாது என்கின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cinereporters