Tuesday, 11 Aug, 6.26 pm Cine Reporters

செய்திகள்
ஷாருக் கானுக்கும் விபூதி அடிக்க பார்த்த அட்லி - கமல் படத்தின் கதையை உல்டா பண்ணி சொல்லி வாங்கிய பல்ப்!

பாலிவுட்டில் படம் இயக்க இருந்த அட்லி, ஷாருக்கானுக்கு ஒரு ஹிட் படத்தின் கதையை உல்டா பண்ணி சொல்லி பல்ப் வாங்கியுள்ளார்.

இயக்குனர் அட்லி இதுவரை இயக்கிய ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. அவரும் கோலிவுட்டின் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ஒருவராக உள்ளார். விஜய்யை வைத்து 3 படங்களை இயக்கிய அவர் அடுத்ததாக ஷாருக் கானை வைத்து படம் இயக்க பாலிவுட்டில் முகாமிட்டார்.

ஷாருக் கானுக்கு கதை தயார் செய்து சொல்லியுள்ளார் அட்லி. கதை முழுவதையும் கேட்ட ஷாருக் கான் , இது கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய நாயகன் படத்தின் கதை போலவே இருப்பதாக சொல்லி அவரைத் திருப்பி அனுப்பியுள்ளார். தமிழ் சினிமாவில் பழைய படங்களின் கதையையே பட்டி டிங்கரிங் செய்து பெரிய நடிகர்களை வைத்து எடுத்த அட்லி காப்பிகேட் இயக்குனர் என ரசிகர்களால் கேலி செய்யப்பட்டார். இந்நிலையில் அதே வேலையையே பாலிவுட்டிலும் செய்யப் பார்த்து பல்ப் வாங்கியுள்ளார் அட்லி.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Cinereporters
Top