Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Sigma ஃபங்க்ஷனில் Kaaka படத்தின் அப்டேட்களை கொட்டித் தீர்த்த சிரஞ்சீவி!

Sigma ஃபங்க்ஷனில் Kaaka படத்தின் அப்டேட்களை கொட்டித் தீர்த்த சிரஞ்சீவி!

Cine Reporters 6 hrs ago

தெலுங்கு சினிமாவில் மிக பிரபலமான ஹீரோ சிரஞ்சீவி. இவருக்கென மிகப் பெரிய ஃபேன் ஃபாலோயிங் இருக்கிறது.

இவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் 'காகா' (Kaaka).

இந்த படத்தை பிரபல இயக்குநர் பாபி கொல்லி இயக்கி வருகிறார்.

இதில் முக்கிய வேடங்களில் அனஸ்வரா ராஜன், நிவேதா பெத்துராஜ், சுனில் ஆகியோர் நடிக்கின்றனர். இதற்கு தமன் எஸ் இசையமைக்கிறார்.

நேற்று நடிகரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள ‘சிக்மா’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் ஃபங்க்ஷனில் கலந்து கொண்ட நடிகர் சிரஞ்சீவி, ‘காகா’ படம் குறித்து பேசுகையில் “இதன் முதல் பாதி படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது.

இரண்டாம் பாதியின் 30% ஷூட்டிங் ஓவர். இசையமைப்பாளர் தமன் முதல் பாதிக்கு பின்னணி இசையமைக்கும் பணியை ஆல்ரெடி துவங்கி விட்டார். படத்தை அடுத்த ஆண்டு (2027) ஜனவரி 13-ஆம் தேதி சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cinereporters