Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
SK27: சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படம்!.. வெளியான பூஜை போட்டோ!.

SK27: சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படம்!.. வெளியான பூஜை போட்டோ!.

Cine Reporters 5 hrs ago

கோலிவுட்டில் முக்கிய நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். தற்போது தாய்க்கிழவி திரைப்படத்தை இயக்கிய சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் நடைபெற்று வருகிறது.

இந்நிலியில், சிவகார்த்திகேயன் அடுத்த திரைப்படத்தை பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம் சார்பில் டிஜி தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் மற்றும் சித்தார்த்த் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

இந்நிலையில்தான், இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சத்யஜோதி தியாகராஜன், ராம்குமார் பாலகிருஷ்ணன், மற்றும் இந்த படத்தில் நடிக்கவுள்ள கயாடு லோஹர் என பலரும் கலந்து கொண்டனர். இது சிவகார்த்திகேயனின் 27வது திரைப்படமாகும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cinereporters