Dailyhunt
திமுகவுக்கு 200க்கும் மேல்.. ஸ்டாலின் ஆட்சி தொடருது.. 10 தோல்வி பழனிசாமிக்கு 11வது தோல்வி.. விஜய் பெரம்பூரில் மட்டும் ஜெயிப்பார்.. விஜயகாந்த் போல் தவெகவுக்கு ஒரே ஒரு தொகுதி தான்.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு முடிவால் உடன்பிறப்புகள் மகிழ்ச்சி..

திமுகவுக்கு 200க்கும் மேல்.. ஸ்டாலின் ஆட்சி தொடருது.. 10 தோல்வி பழனிசாமிக்கு 11வது தோல்வி.. விஜய் பெரம்பூரில் மட்டும் ஜெயிப்பார்.. விஜயகாந்த் போல் தவெகவுக்கு ஒரே ஒரு தொகுதி தான்.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு முடிவால் உடன்பிறப்புகள் மகிழ்ச்சி..

Cine Reporters 1 week ago

மிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஒரு புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கணிப்பின்படி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக, திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி இமாலய வெற்றியை பதிவு செய்யும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. இது வெறும் தேர்தல் வெற்றி மட்டுமல்லாமல், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வரும் திமுகவின் தேர்தல் வெற்றி பயணத்தின் ஒரு நீட்சியாகவே பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு இந்த கணிப்பு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. 2019 மக்களவை தேர்தல் முதல் கடந்த உள்ளாட்சி தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் என தொடர்ந்து 10 தேர்தல்களில் தோல்வியை சந்தித்துள்ள அதிமுகவுக்கு, இது 11-வது தோல்வியாக அமையும் என்று இந்த கணிப்பு எச்சரிக்கிறது. எடப்பாடி பழனிசாமி முன்னெடுத்து வரும் அரசியல் வியூகங்கள் மற்றும் கூட்டணி மாற்றங்கள் வாக்காளர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதையே இது காட்டுகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலங்களில் கூட திமுகவின் கை ஓங்கி இருப்பதாக கூறப்படுவது அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதேபோல், தமிழக அரசியலில் ‘மூன்றாவது சக்தி’யாக உருவெடுக்க முயற்சிக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் குறித்தும் இந்த கருத்துக்கணிப்பு ஒரு சுவாரசியமான தகவலை வெளியிட்டுள்ளது. விஜய் தீவிரமாக பிரச்சாரம் செய்தாலும், தேர்தல் களத்தில் விஜயகாந்தின் தேமுதிக முதல் தேர்தலில் சந்தித்த அதே நிலையை தான் தவெக சந்திக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2006-ல் விஜயகாந்த் மட்டும் விருத்தாசலம் தொகுதியில் வென்றது போல, 2026 தேர்தலில் விஜய்யின் கட்சி பெரம்பூர் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்று, மற்ற இடங்களில் கணிசமான வாக்குகளை பிரிக்கும் என்று கூறப்படுகிறது. பெரம்பூர் தொகுதியில் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கு மற்ற தொகுதிகளில் வெற்றியாக மாற வாய்ப்பில்லை என்பது விஜய்யின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி அலை பெரிய அளவில் இருந்தாலும் அதிருப்தி ஓட்டு அதிமுக, தவெக, நாதக என பிரிவதும், மகளிர் உரிமைத் தொகை மற்றும் புதுமை பெண் போன்ற திட்டங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதும் திமுகவின் இந்த வலுவான நிலைக்கு காரணமாக கூறப்படுகிறது.

இந்த லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு முடிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ‘மீண்டும் ஸ்டாலின், மீண்டும் திமுக’ என்ற முழக்கத்துடன் உடன்பிறப்புகள் இப்போதே தேர்தல் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர். எனினும், தேர்தல் களம் என்பது இறுதி நேரத்தில் மாறக்கூடியது என்பதால், எதிர்க்கட்சிகள் தங்கள் வியூகங்களை மாற்றியமைக்க திட்டமிட்டு வருகின்றன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cinereporters