Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
உங்க பாட்டு இல்லனா என் பொண்டாட்டியை கொன்னுருப்பேன்!.. இளையராஜாவிடம் சொன்ன ரசிகர்!...

உங்க பாட்டு இல்லனா என் பொண்டாட்டியை கொன்னுருப்பேன்!.. இளையராஜாவிடம் சொன்ன ரசிகர்!...

Cine Reporters 20 hrs ago

அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைக்க தொடங்கியவர் இசைஞானி இளையராஜா. அந்த படத்தின் பாடல்கள் கிராமத்தில் மட்டுமல்லாமல் நகரங்களிலும் வரவேற்பை பெற்றது.

இளையராஜா கொடுத்த கிராமத்தை இசை கிராமங்களில் மட்டுன்மல்லாமல் நகரத்தில் வசிப்பவர்களையும் கவர்ந்தது.

80களில் இளையராஜாவின் இசையை நம்பியே பல திரைப்படங்கள் உருவானது. ரஜினி, கமல், விஜயகாந்த், மோகன், ராமராஜன், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இளையராஜாவே இசையமைத்தார். முக்கியமான காட்சிகளில் இருந்த உணர்வை இளையராஜா தனது பின்னணி இசை மூலம் ரசிகர்களிடம் கடத்தினார். அதாவது இயக்குனரும், வசனகர்த்தாவும் செய்ய முடியாததை கூட இளையராஜா செய்தார்.

20 வருடங்கள் கோலிவுட்டில் ஆட்சி செய்தார் இளையராஜா. தற்போதும் கூட ஒரு முடி சூடாத மன்னனாகத்தான் இளையராஜா வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் இசையமைக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்தாலும் அவரின் ரசிகர்கள் இப்போதும் இளையராஜாவை பிரமிப்பாகவே பார்க்கிறார்கள்.

70, 80களில் பிறந்தவர்கள் இப்போதும் இளையராஜாவின் ரசிகர்களாகவே இருக்கிறார்கள். கார் பயணத்தின் போதும், மன அழுத்தம் மற்றும் குழப்பங்களில் இருக்கும் போதும் அவர்கள் இளையராஜாவின் பாடல்களைத்தான் கேட்கிறார்கள். தங்களின் மனக்காயங்களுக்கு இளையராஜாவின் இசை மருந்து போடுவதாக அவர்கள் நம்புகிறார்கள்.

இந்நிலையில்தான், சமீபத்தில் இளையராஜா கொடுத்த பேட்டியில் 'நான் ஒரு நாள் காரில் சென்று கொண்டிருந்தேன்.. சிக்னலில் கார் நின்றபோது எனது கார் அருகே ஒரு ஆட்டோ வந்து நின்றது. அந்த ஆட்டோவில் என்னுடைய பாடல் ஓலித்துக்கொண்டிருந்தது.. நான் காரில் அமர்ந்திருப்பதை பார்த்த அந்த ஆட்டோ ஓட்டுனர் கீழே இறங்கி வந்து என்னை பார்த்து கும்பிட்டு 'சார் நீங்க மட்டும் இல்லனா நான் என் பொண்டாட்டியை கழுத்தை நெரிச்சி கொலை செஞ்சிருப்பேன்' என்று சொன்னார்.

ஒருவருடைய கோபம் எந்த அளவுக்கு சென்றிருந்தாலும் உன்னதமான ஒரு இசை கொலைகாரனை எப்படி மாற்றியிருக்கிறது பாருங்கள் என இளையராஜா நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cinereporters