Dailyhunt
வச்சான் பாரு ஆப்பு.. ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்.. அரசியல் எதிரி திமுக ஆட்சியையும் வீழ்த்தியாச்சு.. கொள்கை எதிரி பாஜகவையும் ஜீரோ ஆக்கியாச்சு.. மற்றும் பலரில் ஒன்றான அதிமுகவை 3வது இடத்துக்கு தள்ளியாச்சு.. இதைவிட என்ன சாதனை வேண்டும் விஜய்க்கு?

வச்சான் பாரு ஆப்பு.. ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்.. அரசியல் எதிரி திமுக ஆட்சியையும் வீழ்த்தியாச்சு.. கொள்கை எதிரி பாஜகவையும் ஜீரோ ஆக்கியாச்சு.. மற்றும் பலரில் ஒன்றான அதிமுகவை 3வது இடத்துக்கு தள்ளியாச்சு.. இதைவிட என்ன சாதனை வேண்டும் விஜய்க்கு?

Cine Reporters 1 week ago

மிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நடிகர் விஜய்க்கு ஒரு மகத்தான வெற்றியாகவும், அவரது எதிரிகளுக்கு சொல்லடி கொடுக்கும் விதமாகவும் அமைந்துள்ளன.

“ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” என்பதை போல, விஜய் தனது அரசியல் எதிரியான திமுகவின் ஆட்சியை கோட்டையிலிருந்து அப்புறப்படுத்தியதோடு, கொள்கை எதிரியான பாஜகவை ஒரு இடத்தில் கூட வெற்றி பெற விடாமல் ‘ஜீரோ’ ஆக்கி சாதனை படைத்துள்ளார்.

அரை நூற்றாண்டுகால திராவிட பேரியக்கங்களின் ஆதிக்கத்தை தகர்த்து, ஆளுங்கட்சியான திமுகவை தற்போது இரண்டாம் இடத்திற்கும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மூன்றாவது இடத்திற்கும் தள்ளியுள்ளார்.

தவெக தற்போது 112 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று, தனித்து ஆட்சி அமைக்கும் நிலையை எட்டியுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்களே தவெக வேட்பாளர்களிடம் தோல்வி அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தனது அறிமுக தேர்தலிலேயே சுமார் 38 சதவீத வாக்குகளை அறுவடை செய்துள்ள விஜய், எம்.ஜி.ஆரின் 1977-ஆம் ஆண்டு சாதனையை முறியடித்து புதிய சரித்திரம் படைத்துள்ளார். திராவிட அரசியல் கட்டமைப்பை வேரோடு சாய்த்து, ஒரு புதிய மாற்றத்தை தமிழக மண்ணில் நிலைநிறுத்தியுள்ள இந்தச் சாதனை, விஜய்யின் அரசியல் ஆளுமையை இந்தியாவையே உற்றுநோக்க வைத்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cinereporters