Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விஜயின் தாத்தா போட்ட நாடகம்.. நாங்கதான் மியூசிக்.. இளையராஜா சொன்ன பிளாஷ்பேக்...

விஜயின் தாத்தா போட்ட நாடகம்.. நாங்கதான் மியூசிக்.. இளையராஜா சொன்ன பிளாஷ்பேக்...

Cine Reporters 18 hrs ago

இசைஞானி இளையராஜா சினிமாவில் இசையமைப்பதற்கு முன் மதுரை பகுதிகளில் நிறைய கம்யூனிஸ்ட் கூட்டங்களில் அவரின் சகோதரர்கள் பாஸ்கர், கங்கை அமரன் ஆகியோரோடு சேர்ந்து அவர்களாகவே பாடல்களை உருவாக்கி பாடியிருக்கிறார்கள்.

அவ்வப்போது அதில் தன்னுடைய சொந்த இசையையும் கலந்து இளையராஜா பாடுவாராம். அதற்கு கம்யூனிஸ்ட் தொண்டர்களிடம் வரவேற்பு இருந்ததாக ஏற்கனவே இளையராஜா ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். அதன்பின் இளையராஜா சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடி அலைந்து அன்னக்கிளி படத்தில் இசையமைத்து தமிழ் சினிமாவில் முக்கிய இசையமைப்பாளராக மாறியதுதான் வரலாறு. ஆனால், அன்னக்கிளி படத்தில் வாய்ப்பு கிடைத்ததற்கு முன் இளையராஜா பட்ட கஷ்டங்கள் பற்றி பலருக்கும் தெரியாது.

இந்நிலையில்தான், ஊடகம் ஒன்றில் பேசிய இளையராஜா ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். சினிமாவில் இசையமைப்பதற்கு முன் நாங்கள் நிறைய நாடகங்களுக்கு இசையமைத்திருக்கிறோம்.. இது பலருக்கும் தெரியாது.. ஒருமுறை நடிகர் விஜயின் தாத்தா நீலகண்டன் அதாவது ஷோபா சந்திரசேகரின் அப்பா.. அவர் தனது மனைவியை வைத்து அதாவது விஜயின் பாட்டியை வைத்து செல்லக்கிளி, சுக்கிர திசை போன்ற நாடகங்களை போட்டார்.

அதற்கு நாங்கள்தான் இசையமைத்தோம்.. அந்த நாடகத்தை விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன்தான் இயக்கினார். மேலும், ஷோபா மற்றும் அவரின் இரண்டு சகோதரர்கள் சுந்தர் மற்றும் சுரேந்தர் ஆகிய மூவரும் அந்த நாடகங்களில் பாடுவார்கள்.. அந்த பாடல்களை உருவாக்கிக் கொடுத்ததும் நாங்கள்தான்' என கூறியிருக்கிறார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cinereporters