விகரம் நடித்த இருமுகன் படத்தின் ரீமேக்தான் ஹாலிவுட்டில் வெளியாகியுள்ள பவர் பிராஜக்ட் என்ற தகவல் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
விக்ரம், நயன்தாரா, தம்பி ராமையா மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியான இருமுகன் திரைப்படம் 2016 ஆம் ஆண்டு ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் வெளியானது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்று 100 கோடி வசூலித்ததாக தயாரிப்பாளர்களால் சொல்லப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் ஹாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜாமி பாக்ஸ் நடித்த பவர் பிராஜெக்ட் என்ற படம் நெட்பிளிக்ஸில் வெளியானது.
ஆனால் இதை இருமுகன் படத்தின் தயாரிப்பாளர் சிபு தமீம்ஸ் மறுத்துள்ளார். இதுகுறித்து மேலும் 'நாங்கள் இருமுகன் படத்தின் ரீமேக் உரிமைகளை இதுவரை யாருக்கும் விற்கவில்லை. சமூகவலைதளங்களில் எழுந்துள்ள குழப்பங்களை இது தீர்க்கும் என நம்புகிறேன்' எனக் கூறியுள்ளார்.

