Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
யூ /ஏ தணிக்கை சான்றிதழ் பெற்ற அன்பில் அவன்

யூ /ஏ தணிக்கை சான்றிதழ் பெற்ற அன்பில் அவன்

விரைவில் வெளியாக உள்ள புதிய திரைப்படமான அன்பில் அவன் தற்போது தணிக்கை பணிகளை நிறைவு செய்துள்ளது.

அசோக் குமார், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள படம் அன்பில் அவன்.

அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திகேயன் இயக்கியுள்ள இந்த படத்தை ஹேப்பி ஹை பிச்சர்ஸ் தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

இந்த நிலையில் அன்பில் அவன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டது. இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே, இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இந்நிலையில், படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ் கிடைத்திருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தணிக்கை பணிகள் நிறைவடைந்துள்ளதால் இப்படம் அக்டோபர் மாதம் 2ம் தேதி வெளியாவது உறுதியாகியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cinereporters