Dailyhunt
1000 கோடியை கடந்து வசூல் வேட்டையாடி வரும் துரந்தர் 2.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

1000 கோடியை கடந்து வசூல் வேட்டையாடி வரும் துரந்தர் 2.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Cineulagam 2 weeks ago

ரூ. 1000 கோடி

ரூ. 1000 கோடி வசூல் சாதனை என்பது தமிழ் மற்றும் மலையாள சினிமாவிற்கு தற்போது வரை கனவாகவே இருக்கிறது.

விரைவில் தமிழ், மலையாள சினிமாவிலிருந்து இந்த சாதனையை படைக்க பிரம்மாண்ட படங்கள் வெளிவரும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கல் மற்றும் பாகுபலி 2 படங்களுக்கு பின் இந்திய அளவில் பல திரைப்படங்கள் ரூ. 1000 கோடி வசூலை எட்டி வருகின்றன. இந்த பட்டியலில் சமீபத்தில் இணைந்த திரைப்படம் தான் துரந்தர் 2.

துரந்தர் 2 வசூல்

இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று 7 நாட்களில் ரூ. 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்தது. இந்திய சினிமாவிலிருந்து ரூ. 1000 கோடி வசூலித்த 10வது திரைப்படம் இதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், 19 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் துரந்தர் 2 உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் இப்படம் 19 நாட்களில் ரூ. 1650 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 36 கோடி வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cineulagam